பியூட்டி டிப்ஸ்: ஆன்லைனில் ஆடைகள் வாங்கப் போறீங்களா?

டிரெண்டிங்

அனைத்து விதமான ஆடைகளும் கண்ணை கவரும் வண்ணங்களில் உள்ளூர்க் கடைகளைவிட ஆன்லைன் ஸ்டோர்களில்தான்  அதிகமாக விற்பனை ஆகிறது.

ஆன்லைனில் நீங்கள் ஆடைகள் வாங்கும்போது, ஒவ்வொரு பிராண்டிலும் அளவு மாறுபடும். எந்த பிராண்டு  உங்களது சைஸுக்கு மிகச் சரியாக உள்ளதோ அதே பிராண்டில் உள்ள வெரைட்டிகளைப் பார்த்து அவற்றில் ஒன்றைத் தேர்ந்தெடுத்து வாங்கலாம்.

பிராண்டு மாறும்போது சில சமயங்களில் உங்கள் சைஸுக்கு ஏற்ற சுடிதார் கச்சிதமாக அமையாமல் போகலாம் என்பதால் ஒரே பிராண்டில் வாங்குவது எப்போதும் நல்லது.

ஆன்லைனில் வாங்கும் பொருட்கள் எந்தவிதமான சேதாரங்களும் இல்லாமல் இருக்கும் என்பதற்கான உத்தரவாதமில்லை. பல சமயம் `நாம் ஆர்டர் செய்த பொருள் இதுதானா’ என்ற சந்தேகம்கூட வரும். நிறம், ஸ்டைல் மட்டுமே உறுதிசெய்து வாங்கும் பொருட்கள் ஏராளம். ஆனால், `ஃபிட் (Fit)’ என்ற முக்கியமான அடிப்படை ரூல் பார்த்து வாங்கும் பொருட்களில் ஆடை மற்றும் காலணிகளுக்கு முக்கியப் பங்கு உண்டு.

ஆன்லைனில் ஆடைகளைப் போட்டுப்பார்த்து வாங்க டிரையல் ரூம் வசதிகள் இருக்காது. எனவே, ஆடைகள் வாங்குவதற்கு முன் உங்களின் உடலமைப்பின் அளவுகளைத் தெரிந்துவைத்துக்கொள்வது மிகவும் முக்கியம். அதற்கு முன், சரியான பேட்டர்னைத் தேர்ந்தெடுப்பதும் அவசியம்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

கிச்சன் கீர்த்தனா: ஈஸி மதுரா பேடா

ரியல் ஷூட்டிங்… கிளம்பும் விஜய்

வரதட்சணை கொடுமை : 3.5 கோடி சீன இளைஞர்கள் பெண் கிடைக்காமல் தவிப்பு!

சிறை வார்டன் ஆய்வகத்தில் சிக்கிய 95 கிலோ போதைப்பொருள்!

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0