பியூட்டி டிப்ஸ்: உடல் எடையைக் குறைக்க உண்ணாவிரதம் இருப்பவரா நீங்கள்?

Published On:

| By christopher

Are you fasting to lose weight?

இன்றைய நாட்களில் உடலை  ஃபிட்டாக வைத்துக்கொள்ள வேண்டும் என்பதற்காக, அவ்வப்போது சாப்பிடாமல் இருக்கிறார்கள் பலர்… இது சரியா? உண்ணாவிரதம் இருப்பதால் உடலுக்கு வேறு ஏதாவது பிரச்னை வருமா? டயட்டீஷியன்ஸ் விளக்கம் என்ன?

“சீக்கிரத்தில் எடை குறைய வேண்டும் என்று பலரும் உண்ணாவிரதம் இருப்பார்கள். எடை இழக்க உண்ணாவிரதம் சிறந்த வழி அல்ல. உண்ணாமல் இருப்பது ஒருவரின் உடல் ஆரோக்கியத்தைப் பாதிக்கக்கூடிய விஷயம். இரவில் ஆறு முதல் எட்டு மணி நேரத்துக்கு தூங்குகிறோம். இந்த நேரத்தில் எந்த உணவையும் நாம் எடுத்துக்கொள்வது இல்லை. இது இயற்கை செயல்பாடு என்பதால் உடலுக்கு எந்தவிதமான பாதிப்பும் ஏற்படாது. காலை விழித்ததும் காலை உணவைக் கட்டாயம் சாப்பிட வேண்டும்.

நீண்ட நேரம் உண்ணாமல் இருந்ததைத் தடுப்பதால்தான், காலை உணவை ‘பிரேக்ஃபாஸ்ட்’ என்றே கூறுகிறோம். ஆனால், பலரும் உடல் எடையைக் குறைக்க காலை உணவைத் தவிர்க்கின்றனர். இது மிகத் தவறான பழக்கம்.

நீண்ட நேரம் சாப்பிடாமல் இருந்து சாப்பிடும்போது அளவில்லாமல் சாப்பிடுவார்கள். இதனால், உணவை நன்கு மெல்லாமல், ஊட்டச்சத்து குறைபாடும் ஏற்படும். சாப்பிடாமல் இருப்பதால் ‘ஹைபர்கிளைசிமியா’ (Hyperglycemia)  எனப்படும் ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரிப்பு, நடுக்கம் போன்ற பிரச்சினைகள் வர அதிக வாய்ப்புள்ளது. முக்கியமாக கர்ப்பிணிப் பெண்கள், சர்க்கரை நோயாளிகள் ஒருபோதும் உண்ணா நோன்பு இருக்கவே கூடாது” என்று வலியுறுத்துகிறார்கள்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

கிச்சன் கீர்த்தனா: சண்டே ஸ்பெஷல்: சுவையான மீன் பிரியாணியும் அதற்கேற்ற ஏற்ற மீனும்…

இனிமேல் காந்திய பாதை தான்… அப்டேட் குமாரு

65 ஆண்டு கால கனவு… அத்திக்கடவு அவிநாசி திட்டத்தை தொடங்கி வைத்த ஸ்டாலின்

சிப்காட் மெகா குடியிருப்பு… “தொழில் வளர்ச்சியில் தனிக்கவனம்” – ஸ்டாலின் பேச்சு!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share