ஹெல்த் டிப்ஸ்: வகைவகையான தேநீரில் இவ்வளவு நன்மைகள் இருக்கிறதா?

Published On:

| By Selvam

Are there so many benefits of different types of tea?

பால் கலக்காத பானம் தயாரித்துக் குடிப்பதால் உடலுக்கு நன்மை ஏற்படுவதுடன் செலவையும் குறைக்கலாம். இயற்கையான முறையில் தேநீரை தயாரித்து குடிப்பதால் உடலுக்கு ஆரோக்கியம் நிறைந்ததாகவும் பக்க விளைவுகளை ஏற்படுத்தாது. Are there so many benefits of different types of tea?

இதோ சில தேநீரின் நன்மைகள் பற்றி பார்க்கலாம்.

துளசி இலை தேநீர்: சில துளசி இலைகளை நீரில் கொதிக்க வைத்து வெல்லம், ஏலக்காய் சேர்த்தால் துளசி இலை தேநீர் ரெடி.

இது உடலுக்கு ஆரோக்கியத்தை தருவதுடன் புத்துணர்ச்சியை அளிக்கும். சளி பிடித்திருக்கும் நேரத்தில் இதனை பருகினால் நன்மை அளிக்கும்.

ஆவாரம் பூ தேநீர்: காம்பு நீக்கிய ஆவாரம்பூக்களை தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து வடிகட்டிய பின் எலுமிச்சை பழச்சாறு வெல்லம் அதில் கலந்து வாரம் ஒரு டீ சாப்பிடலாம். இது உடலின் வெப்பத்தை தணிக்கும். உடல் உபாதைகளை குறைக்க வழிவகுக்கும்.

செம்பருத்திப்பூ தேநீர்: செம்பருத்திப் பூ தேநீர் கேட்பதற்கு வித்தியாசமாக இருந்தாலும், ஒற்றை செம்பருத்திப் பூக்களின் இதழ்களை மட்டும் பிரித்தெடுத்து நீரில் போட்டுக் கொதிக்க வைத்து வடிகட்டுங்கள்.

அதில் எலுமிச்சைப் பழச்சாறு, வெல்லம் கலந்து டீயாகச் சுவைக்கலாம். ருசியை பார்க்காமல் வாரம் 2 முறை பருகினால் உடலுக்கு ஆரோக்கியத்தை தரும்.

புதினா இலை தேநீர்: புதினா இலைகளை பறித்துகொண்டு அதனை நீரில் கொதிக்க வைத்து வடிகட்டி எலுமிச்சைப் பழச்சாறு, வெல்லம் அல்லது கருப்பட்டி சேர்த்து குடித்து வாருங்கள்.

கொய்யா இலை தேநீர்: கொய்யா இலைகளை நீரில் கொதிக்க வைத்து ஏலக்காய், வெல்லம் சேர்க்க வேண்டும். சளி பிடிக்காமல் ஆரோக்கியத்தை தரும். Are there so many benefits of different types of tea?

முருங்கைக் கீரை தேநீர்: முருங்கை இலையுடன் எலுமிச்சை இலையையும் சேர்த்து நீரில் கொதிக்க வைத்து வெல்லம் சேர்த்தால் மணமிக்க முருங்கைக் கீரை தேநீர் ரெடி. தேன் சேர்த்துகொள்ளுங்கள் தேவைப்பட்டால் பனைவெல்லம், நாட்டுச்சக்கரை சேர்ப்பது தான் மிகவும் நல்லது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

பியூட்டி டிப்ஸ்: வீட்டிலேயே  திரெடிங் செய்ய  எளிய வழிகள்!

பொதுத்தேர்வு கலாட்டா: அப்டேட் குமாரு

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel