‘நகர வாழ்க்கை காரணமாக, இந்தியாவில் சுமார் 20 கோடி பேர் உடல் இயக்கமில்லாத வாழ்க்கைமுறையைக் கொண்டிருக்கிறார்கள்.
இதனாலேயே நோய்கள் அதிகரித்து வருகின்றன’ என்கிறது, ‘டால்பெர்க் அட்வைசர்ஸ்’ மற்றும் ‘ஸ்போர்ட்ஸ் அண்ட் சொசைட்டி அக்செலரேட்டர்’ (Dalberg Advisors and Sports and Society Accelerator) அமைப்புகள் இணைந்து நடத்திய ஆய்வு முடிவு.
குறிப்பாக, இளம் வயதினரின் ஆரோக்கியம் நகர்மய சூழலால் அதிகமாக பாதிக்கப்பட்டிருப்பதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பெரும்பாலானவர்கள் நடைப்பயிற்சி போன்ற சாதாரண உடல்ரீதியான செயல்பாட்டில்கூட ஈடுபடுவதைக் கூட தவிர்க்கின்றனர் என்று கூறியிருக்கிறது ஆய்வு. இந்த ஆய்வு குறித்து பொதுநல மருத்துவர்கள் கூறும் விளக்கம் என்ன?
‘‘முன்பு குழந்தைகளுக்கு விளையாடுவதற்கென பொது இடங்கள் இருந்தன. ஆனால், இன்று மக்கள் தொகைப் பெருக்கத்தாலும், நகர்மயமான சூழல்களாலும் குழந்தைகள் விளையாடுவதற்கு இடம் இல்லை.
டிஜிட்டல் பயன்படுத்தும் பழக்கம் அதிகமாகியிருக்கிறது. வீடியோ கேம்ஸ் விளையாடுகிறார்கள். இரண்டு, மூன்று தலைமுறைக்கு முந்தைய பெண்களும் உடற்பயிற்சி செய்யவில்லைதான். ஆனாலும், அவர்களின் தினசரி வாழ்க்கை முறையே பயிற்சிகள் போலத்தான் இருந்தன.
ஆறு, குளம் போன்ற இடங்களிலிருந்து தண்ணீர் சுமந்து வந்தார்கள், தானியங்களை இடித்தார்கள், கடினமான தோட்ட வேலைகளைச் செய்தார்கள். அதனால் அவர்கள் ஆரோக்கியமாக இருந்தார்கள்.
இன்று நவீன வசதிகள் காரணமாக பல வேலைகள் எளிதாகிவிட்டன. அதனாலேயே நம் உடல் இயக்கமும் குறைந்து விட்டது. இத்தகைய சூழலில் உடற்பயிற்சிகள் செய்வது கட்டாயம் என்றே சொல்ல வேண்டும்.
இந்தியர்கள் பார்ப்பதற்கு ஒல்லியாக இருப்பதுபோல் தோன்றினாலும் ஆரோக்கியமானவர்கள் என்று சொல்லிவிட முடிவதில்லை.
இன்று நீரிழிவு போன்ற பிரச்சினைகள் நம்மிடம் அதிகரித்திருக்கின்றன. எனவே, உடற்பயிற்சிகள், யோகா, கார்டியோ போன்ற பயிற்சிகளைச் செய்ய வேண்டும்.
அப்போதுதான் எதிர்காலத்தில் முதுகுவலி, மூட்டுவலி போன்ற அவஸ்தைகளைத் தவிர்க்க முடியும். உடற்பயிற்சிகள் செய்யும்போது நல்ல மனநிலையைத் தரும் ஹார்மோன்கள் (Feel good hormones) சுரக்கும். இதனாலேயே உடற்பயிற்சி என்பது மிகச்சிறந்த மன அழுத்த நிவாரணியாக இருக்கிறது.
பொதுவாகவே 30 வயதுகளின் தொடக்கத்திலேயே தசைகளின் வலு குறைய ஆரம்பிக்கும். இதற்கு `சார்கோ பீனியா’ (Sarcopenia) என்று பெயர்.
எனவே, ஆண்கள் மட்டுமன்றி பெண்களுக்கும் ஸ்ட்ரென்த் டிரெய்னிங் பயிற்சிகள் ரொம்பவே அவசியம்.
தசைகள் வலுவாக இருக்க வேண்டும். தசைகள் வலுவாக இருக்க வேண்டுமென்றால் போதுமான அளவு உணவின் மூலம் புரதம் எடுத்துக் கொள்ள வேண்டும்.
உடலை வலுவாக்கும் பயிற்சிகளால் கொழுப்பின் அளவு குறையும். தசைகள் ஒழுங்குக்கு வரும்’’ என்கிறார்கள்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
இந்த பதிலை எதிர்பார்க்கவே இல்லை – அப்டேட் குமாரு
டிஜிட்டல் திண்ணை: சீனியர்களுக்கு ஷாக் ட்ரீட்மென்ட்… பொன்முடியோடு முடிந்து போன பின்னணி!
“இந்தியாவில் தயாரிக்கப்பட்ட பொருட்களை பரிசாக கொடுங்கள்” – மோடி அட்வைஸ்!
சசிக்குமாரை அந்தளவுக்கு கொடுமைப்படுத்தினேன்- நந்தன் படம் குறித்து இரா. சரவணன் உருக்கமான பதிவு!