பொதுவாக கால்வலி இருந்தாலே எம்சிஆர் செருப்புகள் (Micro Cellular Rubber ) வாங்கிப் பயன்படுத்தலாம் என பலரும் நினைக்கிறார்கள். இந்த வகை செருப்புகள் எல்லாருக்கும் ஏற்றதா? வலி நிர்வாக மருத்துவர்களின் விளக்கம் என்ன?
கால்வலி என்று பொதுவாகக் குறிப்பிடுபவர்கள், அது மூட்டுவலியா, பாதவலியா, கணுக்கால் வலியா என்ற விவரம் இல்லாமல் எம்சிஆர் செருப்புகளை வாங்கி அணிந்து கொள்கிறார்கள். அது தவறு. அந்தந்த வலிக்கேற்ப சிகிச்சைகள் வேறுபடும்.
பாதவலி என்பது நம் பாதங்களில் உள்ள உள்கூட்டுத் தசைகள் (Intrinsic foot muscles) என்பவை இருக்கும். இவைதான் நம் பாதங்களை வில்போல வளைத்துப் பிடித்திருக்க உதவும் சிறு தசைகள்.
நம் உடலின் மொத்த எடையையும் ஒரு காலில் இருந்து இன்னொரு காலுக்கு மாற்றுவதற்கான எலாஸ்டிக் பவுன்சிங் பிளேட் போன்று இவை வேலை செய்கின்றன.
வயதாக, ஆக முதுமையின் தாக்கமானது மூட்டுகளில் மட்டுமன்றி, தசைகளிலும் தெரிய ஆரம்பிக்கும். அந்த நிலையில் மேற்குறிப்பிட்ட உள்கூட்டுத் தசைகள் பலவீனமாகத் தொடங்கும். அப்போது ஒவ்வோர் அடி எடுத்து வைக்கும்போதும் பாதவலியை உணர ஆரம்பிப்பார்கள்.
பொதுவாக பாதவலி, எரிச்சல் இருந்தாலே எம்சிஆர் செருப்புகள் (Micro Cellular Rubber ) வாங்கிப் பயன்படுத்தலாம் என பலரும் நினைக்கிறார்கள்.
இந்த வகை செருப்புகள், நம் உடல் எடையை ஒரே பக்கம் குவியாமல் பரத்திக்கொடுக்கும்படியானவை. ஆனால், இவை எல்லோருக்கும் தேவைப்படுவதில்லை.
நீரிழிவு பாதிப்பு, நரம்பு பாதிப்புகள் உள்ளவர்களுக்கு, மருத்துவர்கள் தேவையறிந்து MCR செருப்புகளைப் பரிந்துரைப்பார்கள்.
இந்த மாதிரியான எந்தத் தொந்தரவும் இல்லாதவர்களுக்கு ‘ஆர்ச் சப்போர்ட்’ (arch support slippers) செருப்புகள் உதவியாக இருக்கும்.
எனவே, உங்களுடைய பிரச்னை என்ன, அதன் காரணம் என்ன என்பதையெல்லாம் பார்த்து மருத்துவர் ஆலோசனையின்படி செருப்புகளைத் தேர்ந்தெடுத்து அணிவதுதான் சரியாக இருக்கும்” என்று விளக்கமளிக்கிறார்கள்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிச்சன் கீர்த்தனா : மரவள்ளிக்கிழங்கு மசால் வடை
‘கோ பேக்’, ‘கம் பேக்’… – அப்டேட் குமாரு
ஹெல்த் டிப்ஸ்: ஜலதோஷத்தை விரட்டும் வீட்டு வைத்தியம்!
பியூட்டி டிப்ஸ்: முகத்தில் மேஜிக் செய்யும் ஃபேஸ் பேக்… வீட்டிலேயே செய்யலாம்!