உயிரைக் காப்பாற்றிய ஆப்பிள் வாட்ச்: வாழ்த்து கூறிய டிம் குக்
மலை ஏற்றத்தின்போது எதிர்பாராத விதமாக பள்ளத்தாக்கில் விழுந்து சிக்கிய 17வயது இளைஞர் ஆப்பிள் வாட்ச் உதவியின் மூலமாக மீட்கப்பட்டுள்ளார்.
மகாராஷ்டிரா மாநிலம் ராய்காட்டைச் சேர்ந்த மருத்துவ மாணவர் ஸ்மித் மேத்தா. இவர் விலாஸ்பூர் கோட்டையில் மலை ஏற்றம் மேற்கொண்ட போது அங்குள்ள ஒரு பள்ளத்தாக்கில் விழுந்தார்.
அப்போது அவரது செல்லுலார் மாடல் ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 7மூலம் பெற்றோர் மற்றும் நண்பர்களை தொடர்பு கொண்டு மீட்கப்பட்டுள்ளார்.
இதுகுறித்து இளைஞர் ஸ்மித் என்டிடிவிக்கு அளித்த பேட்டியில், “எனக்கு சொந்தமான செல்லுலார் ஆப்பிள்வாட்ச் மாடலால் நான் தற்போது உயிருடன் இருக்கிறேன் என்று நினைக்கிறேன்.
இந்தஆண்டு ஜூலை மாதம் 11-ஆம் தேதி விலாஸ்பூர் கோட்டைக்கு எனது நண்பர்களுடன் மலை ஏறும் போது பலத்தமழை பெய்து கொண்டிருந்தது. மலையேற்றம் நன்றாக சென்று கொண்டிருந்தது. விலாஸ்பூர் கோட்டையை அடைந்து புகைப்படங்களை எடுத்து விட்டு திரும்பும் வழியில் நான் பள்ளத்தாக்கில் வழுக்கி விழுந்தேன்.
அங்கிருந்த அடர்த்தியான இலைகளில் சிக்கிக்கொண்டேன். எனது இரண்டு கணுக்கால்களும் சிதைந்தன. என்னை யாராலும் கண்டுபிடிக்க முடியவில்லை. நான் முழு சுயநினைவுடன் இருந்தேன்.
என்னிடம் தொலைபேசி இல்லாததால் உதவிக்கு யாரையும் அழைக்க முடியவில்லை. ஆப்பிள் வாட்ச் எனது நெட்வொர்க்குடன் இணைக்கப்பட்டிருப்பதை நான் கண்டேன்.
ஆப்பிள் செல்லுலார் வாட்சின் மூலம் தொலைபேசி கையில் இல்லாத போதும், போன் செய்ய முடியும். எனது நண்பர்கள் மற்றும் பெற்றோருக்கு ஆப்பிள் வாட்ச் மூலம் தொடர்பு கொண்டு நான் சிக்கியிருந்த இடத்தை தெரிவித்தேன்.
பின்னர் மீட்புகுழுவினர் என்னை சரிவிலிருந்து தூக்கி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.” என்றார்.
நடந்த சம்பவங்கள் குறித்து ஆப்பிள் தலைமை நிர்வாக அதிகாரி டிம் குக்கிற்கு கடிதம் எழுதி எனது நன்றியை தெரிவித்தேன். நீங்கள் விரைவாக குணமடைய வாழ்த்துகிறேன் என்று எனக்கு பதில் கடிதம் அனுப்பினார் என்று ஸ்மித் தெரிவித்துள்ளார்.
செல்வம்
நீண்ட போராட்டத்துக்கு பின் சீறி பாய்ந்த ஆர்டெமிஸ் 1!
“திராவிடர் என்ற இனம் இல்லை”- ஆளுநர் ரவி பேச்சு!