ஐபோன் வாடிக்கையாளர்கள் வெகு நாட்களாக எதிர்பார்த்து காத்திருந்த ஐபோன் 14 மாடலை ஆப்பிள் நிறுவனம் இந்த வாரம் அறிமுகம் செய்தது. அதன் விலை ரூ.1,89,900 க்கு விற்பனை செய்யப்படுகிறது.
அதே சமயத்தில், ஐபோன் 12 மினி மற்றும் ஐபோன் 13 ப்ரோவை நிறுத்துவதாக ஆப்பிள் நிறுவனம் அறிவித்திருந்தது. சர்வதேச சந்தையில் இந்த ஆண்டு மார்ச் மாதத்தில் ஆப்பிள் நிறுவனம் ஐபோன் SE 2022 என்ற மாடலை அறிமுகம் செய்தது. இதே மாடல் இந்தியாவிலும் அறிமுகம் செய்யப்பட்டது.
இதன் விலை ரூ. 43,999 என நிர்ணயம் செய்யப்பட்டு இருந்தது. இந்த நிலையில், ஐபோன் SE 2022 மாடல் விலையை ஆப்பிள் நிறுவனம் திடீரென உயர்த்தி இருக்கிறது.
விலை உயர்வுக்கான காரணம் பற்றி ஆப்பிள் சார்பில் இதுவரை எந்த தகவலும் கூறப்படவில்லை.
எனினும், இந்திய ரூபாய்க்கு நிகரான அமெரிக்க டாலர் மதிப்பில் ஏற்படும் மாற்றமே காரணமாக இருக்கும் என சொல்லப்படுகிறது.
இத்துடன் ஸ்மார்ட்போன் உற்பத்தி துவங்கி வினியோகம் வரை பல்வேறு கட்டணங்கள் மாறி இருப்பதும் விலை உயர்வுக்கு காரணமாக இருக்கலாம்.
விலை உயர்வுக்கு முன் இந்தியவில் ஐபோன் SE 2022 (64, 128 மற்றும் 256 ஜிபி) மாடல்கள் விலை ரூ. 43,990, ரூ. 48,900 மற்றும் ரூ. 58,900 என நிர்ணயம் செய்யப்பட்டு இருந்தது.
புதிய விலை விவரம்: ஐபோன் SE 2022 (64 ஜிபி) ரூ. 49,990 -க்கும் ஐபோன் SE 2022 (128 ஜிபி) ரூ. 54,900 -க்கும் ஐபோன் SE 2022 (256 ஜிபி) ரூ. 64,900 -க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
மு.வா.ஜெகதீஸ் குமார்