உலகளவில் ஐபோன் பிரியர்கள் பெரிதும் எதிர்பார்த்திருந்த நவீன தொழில்நுட்ப வசதிகளுடன் கூடிய ஐபோன் 14 சீரிஸ் மாடல்களை ஆப்பிள் நிறுவனம் அறிமுகப்படுத்தி உள்ளது.
அமெரிக்காவின் கலிபோர்னியாவில் உள்ள தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் ஐபோன் உள்ளிட்ட சாதனங்களை ஆப்பிள் நிறுவனத்தின் சி.இ.ஓ. டிம் குக் அறிமுகப்படுத்தினார்.
அதனைத் தொடர்ந்து ஆப்பிள் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ள ஐபோன்களின் விலை மற்றும் சிறப்பம்சங்கள் உள்ளிட்ட விவரங்கள் வெளியாகியுள்ளன.
முந்தைய மாடல்களில் வெளியாகும் என்று எதிர்பார்த்திருந்த செயற்கைகோள் தொடர்பு, விபத்து அறிவிப்பு வசதி போன்ற அம்சங்களோடு ஆப்பிள் ஐபோன் 14, ஐபோன் 14 ப்ளஸ், ஐபோன் 14 ப்ரோ, ஐபோன் 14 ப்ரோ மேக்ஸ் ஆகியவை வெளியாகியுள்ளன.
அது மட்டுமின்றி ஆப்பிள் ஐவாட்ச் எஸ்.இ, ஆப்பிள் ஐவாட்ச் 8, ஆப்பிள் ஐவாட்ச் அல்ட்ரா மற்றும் ஏர்போட்ஸ் 2 ஆகியவற்றையும் ஆப்பிள் நிறுவனம் அறிமுகப்படுத்தி உள்ளது.

ஆப்பிள் ஐபோன் 14
ஆப்பிள் ஐபோன் 13இல் இடம்பெற்றுள்ள அதே A15 பயோனிக் சிப் கொண்டு வெளியாகியுள்ளது.
ஆனால் அதன் அப்கிரேட் செய்யப்பட்ட தொழில்நுட்பத்தினால் முந்தைய மாடலை விட 18% வேகமாக திறனோடு வேலை செய்யும் என்று குறிப்பிட்டுள்ளனர்.
மேலும் மிட்நைட், ஸ்டார்லைட் , ப்ளு, பர்ப்பில் மற்றும் ப்ரொடக்ட் ரெட் நிறங்களில் கிடைக்கும் ஐபோன் 14 நாளை (செப்டம்பர் 9) முதல் இதனை முன்பதிவு செய்யலாம் என்றும், செப்டம்பர் 16 முதல் இது விற்பனைக்கு வரும் என்றும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஐபோன் 14ன் துவக்க விலை ரூ.79,900 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இதில் உள்ள சிறப்பு வசதிகள்:
A15 பயோனிக் சிப் ப்ராசசர்
IP68 வாட்டர் ரெஸிஸ்டண்ட் மற்றும் டஸ்ட் ப்ரூஃப்
12MP+12MP பின்பக்க கேமரா + 12MP முன்பக்க கேமரா
6.1இன்ச் ரெட்டினா XDR டிஸ்பிளே
டூயல் இ-சிம் வசதி
விபத்து அறிவிப்பு வசதி
எமெர்ஜென்சி எஸ்ஓஎஸ் வசதி

ஆப்பிள் ஐபோன் 14 ப்ளஸ்
ஐபோன் 14 இல் உள்ள அதே வசதிகளுடன் கூடுதலாக 6.7இன்ச் பெரிய டிஸ்பிளே வசதியுடன் வெளியாகியுள்ளது ஆப்பிள் ஐபோன் 14 ப்ளஸ்.
இதனை நாளை (செப்டம்பர் 9) முதல் இதனை முன்பதிவு செய்யலாம் என்றும், அக்டோபர் 7ம் தேதி முதல் இது விற்பனைக்கு வரும் என்றும் ஆப்பிள் நிறுவனம் தெரிவித்துள்ளது. ஐபோன் 14 பிளஸ்-ன் துவக்க விலை ரூ.89, 900 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
ஆப்பிள் ஐபோன் 14 ப்ரோ
ஸ்மார்ட் போன் வரலாற்றில் ஒரு அதிவேகமான ப்ராசஸரோடு வெளியாகியுள்ள அதிநவீன ஐபோன் மாடல் இந்த ஐ 14 ப்ரோ.
அதன் இன்-டிஸ்பிளே டைனமிக் ஐலேண்ட் வசதி தனித்துவமான வரவேற்பை பெற்றுள்ளது. மேலும் இது உயர்த்தப்பட்டுள்ள கேமரா மெகாபிக்ஸல் மற்றும் ஆப்பிள் ப்ரோ ரா போட்டோ வசதி ஆகியவையும் வரவவேற்பை பெற்றுள்ளன.
இதனை நாளை முதல் முன்பதிவு செய்து கொள்ளலாம் என்றும், செப்டம்பர் 16 முதல் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐபோன் 14 ப்ரோவின் துவக்க விலை ரூ.1, 29,900 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இதன் சிறப்பு வசதிகளாக,
A16 பயோனிக் சிப் ப்ராசசர்
48MP மெயின் +12MP அல்ட்ரா வைட் +12MP டெலிபோட்டோ பின்பக்க கேமரா + 12MP ட்ருடெப்த் முன்பக்க கேமரா
ஸ்பேஸ் ப்ளாக், டீப் பர்ப்பில், சில்வர் மற்றும் கோல்ட் நிறங்களில் கிடைக்கிறது.
6.1இன்ச் சூப்பர் ரெட்டினா XDR OLED டிஸ்பிளே
டைனமிக் ஐலேண்ட் வசதி
IP68 வாட்டர் ரெஸிஸ்டண்ட் மற்றும் டஸ்ட் ப்ரூஃப்
டூயல் இ-சிம் வசதி
விபத்து அறிவிப்பு வசதி
எமெர்ஜென்சி எஸ்ஓஎஸ் வசதி
30 நிமிடத்தில் 50% சார்ஜிங் வசதி
1டிபி வரை சேமிப்பு வசதி போன்றவை உள்ளன.
ஆப்பிள் ஐபோன் 14 ப்ரோ மேக்ஸ்
ஆப்பிள் ஐபோன் 14 ப்ரோவின் அப்டேட் வெர்சனாக அதே வசதிகளுடன் கூடுதலாக 6.7இன்ச் பெரிய டிஸ்பிளேயில் வெளியாகியுள்ளது.
ஆப்பிள் ஐபோன் 14 ப்ரோ மேக்ஸ். இதனை செப்டம்பர் 9 இலிருந்து ப்ரீபுக்கிங் செய்யலாம். செப்டம்பர் 16இலிருந்து விற்பனைக்கு வருகிறது. ஐபோன் 14 ப்ரோ மேக்ஸ் துவக்க விலையாக ரூ. 1,39, 900 ஆக நிர்ணயிக்கபப்ட்டுள்ளது.

ஐ ஸ்மார்ட் வாட்ச்
இவற்றுடன் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள ஸ்மார்ட் வாட்ச்களும் பொதுமக்களை வெகுவாக கவர்ந்துள்ளன.
ஆப்பிள் ஸ்மார்ட் வாட்ச் எஸ்.இ.ரகத்தில் மொத்தம் 8 நிறங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இந்த ஸ்மார்ட் வாட்ச்கள் வரும் 16-ம் தேதி முதல் சந்தையில் அறிமுகப்படுத்தப்படுகிறது.
இந்த ஸ்மார்ட் வாட்ச்களின் விலை ரூ.29,900 என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆப்பிள் சீரிஸ் 8 ரக ஸ்மார்ட் வாட்ச்களின் ஆரம்ப விலை ரூ. 45, 900 என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆப்பிள் ஏர்பட்ஸ் ப்ரோ 2 என பெயரில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள ஏர்போட்ஸ்களில் ஆரம்ப விலை ரூ.26,900 என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கிறிஸ்டோபர் ஜெமா