ஆப்பிள் நிறுவனத்தின் ஃபார் அவுட் 2022 நிகழ்ச்சி இன்று ( செப்டம்பர் 7 ) நடைபெற உள்ளது.
இதில் ஆப்பிள் நிறுவனத்தின் பல புதிய வகை மாடல் போன்கள் அறிமுகம் செய்யப்படவுள்ளது.
குறிப்பாக ஐபோனின் அடுத்த சீரிஸ் ஐபோன் 14 மாடலின் விலை மற்றும் அதன் அம்சங்கள் எப்படி இருக்கும் என்ற எதிர்ப்பார்ப்பு வாடிக்கையாளர்களிடம் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் தான் ஃபார் அவுட் 2022 ல் ஐபோன் 14 , ஐ போன் 14 மேக்ஸ் , ஐ போன் 14 ப்ரோ மற்றும் ஐ போன் 14 ப்ரோ மேக்ஸ் போன்ற மாடல்களும் அறிமுகமாகவுள்ளது.

ஐபோன் 14 மாடல்களின் விலையானது, முந்தைய ஐ போன் 13 சீரிஸ் மாடல்களை விட குறைந்த விலையில் இருக்கும்.
மேலும் ஐபோன் 13 ன் f/2.2 அப்ரேச்சர் (aperture)யை ஓப்பிடும் போது, ஐ போன் 14 ன் முன்பக்க கேமரா மற்றும் செல்பி கேமரா ஆட்டோஃபோகஸ் திறன் f/1.9 அப்ரேச்சர் (aperture ) கொண்டதாக உள்ளது.

இதோடு இந்த மாடல்கள் அனைத்தும் ஐஓஎஸ் 16, ஏ 16 பயோனிக் சிப் மற்றும் மற்ற ஐ போன் மாடல்களை ஒப்பிடும் போது மேம்படுத்தப்பட்ட கேமராக்கள் மற்றும் பேட்டரி அம்சங்களுடன் வரவுள்ளது.
இன்று (செப்டம்பர் 7 ) நடக்கும் இந்த நிகழ்ச்சியின் போது, ஆப்பிள் ஏர்போட்ஸ் 2 ப்ரோ என்ற புதிய ஏர்போட்ஸ்ளை (Airpods )ஆப்பிள் நிறுவனம் வெளியிட உள்ளது.
இந்த மாடல், H1 ப்ராஷசர் (processor), லாஸ்லெஸ் ஆடியோ கோடெக் இன்- இயர் விங் டிப் டிசைன் மற்றும் பல மேம்படுத்தப்பட்ட டிசைன்களுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இதே போன்று ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 8, வாட்ச் ப்ரோ, வாட்ச் எஸ்இ யும் இன்று (செப்டம்பர் 7 )அறிமுகம் செய்யப்படவுள்ளது.
மற்ற ஸ்மார்ட்வாட்சுகளை ஒப்பிடும் போது மேம்படுத்தப்பட்ட அம்சங்களுடன் இது அறிமுகம் ஆகும் என்று கூறப்படுகிறது.

இந்த ஆப்பிள் வாட்சுகளில் உடல் வெப்பநிலை சென்சார் மற்றும் உடல் ஆரோக்கியம் சம்பந்தமான விஷயங்களையும் அறிந்து கொள்ள முடியும்.
மேலும் S7 ப்ராசசரை விட சற்று அதிக சக்தி வாய்ந்ததாக S8 சிப் உள்பட மேம்படுத்தப்பட்ட அம்சங்களுடன் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மு.வா.ஜெகதீஸ் குமார்
vivo y35 launch: பட்ஜெட் விலையில் அசத்தல் ஸ்மார்ட் போன்!