ஆப்பிள் ஐபோன் புதிய அப்டேட் iOS 17 இன்று (செப்டம்பர் 18) வெளியாகிறது.
மொபைல் உற்பத்தியில் உலக அளவில் சிறந்த நிறுவனமான ஆப்பிள் பயனர்களுக்கான புதிய மென்பொருள் ஐஓஎஸ் 17-ஐ ஜூன் மாதம் ஆப்பிள் உலகளாவிய டெவலப்பர்கள் மாநாட்டில் வெளியிட்டது. பல மாத சோதனைகளுக்குப் பிறகு, ஆப்பிள் தனது புதிய ஐஓஎஸ் 17-ஐ பயனர்களுக்காக வெளியிட உள்ளது.
இந்தியாவில் iOS 17 அப்டேட் இன்று இரவு 10 மணி அல்லது நாளை அதிகாலையில் ஆப்பிள் பயனர்களுக்கு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
எந்தெந்த போன்களில் ஐஓஎஸ் 17 அப்டேட் கிடைக்கும்?
ஐபோன் XS, XS MAX, ஐபோன் XR, ஐபோன் 11, ஐபோன் 11 புரோ, 11 புரோ மேக்ஸ், ஐபோன் 12, 12 MINI, ஐபோன் 12 புரோ, 12 புரோ மேக்ஸ், ஐபோன் 13, 13 MINI, ஐபோன் 13 புரோ, 13 புரோ மேக்ஸ், ஐபோன் 14, 14 பிளஸ், ஐபோன் 14 புரோ, 14 புரோ மேக்ஸ், ஐ போன் SE 2nd Gen, ஐபோன் SE 3rd Gen
ஐஓஎஸ் 17 புதிய வசதிகள்
வாய்ஸ் டெக்ஸ்ட்
இன்கம்மிங் அழைப்புகளில் மொபைலில் உள்ள ஒவ்வொரு தொடர்புகளுக்கும் குறிப்பிட்ட போஸ்டர்களை செட் செய்துகொள்ள முடியும். வாய்ஸ்மெயில் தகவல்களை எழுத்து வடிவில் காட்டும்.
இமேஜ் கட் அவுட்
புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களில் இருந்து நமது உருவத்தை தனியாக பிரித்து எடுக்கலாம். இதனை வேறு புகைப்படங்கள் அல்லது பேக்ரவுண்டில் பொறுத்தும் சேவையை ஆப்பிள் வழங்குகிறது.
போட்டோஸ் ஆப்
புகைப்படங்களை எல்லாம் தனியாக எடுத்து ஒரு பத்திரிகை போல மாற்றலாம். நாம் எடுத்த போட்டோ எங்கு எடுக்கப்பட்டது. அதன் காரணம் என்ன போன்ற விவரங்களை எழுதலாம்.
ஃபிரி ஃபார்ம் ஆப்
வாட்டர்கலர் பிரஷ், காலிகிராஃபி பென், ஹைலைட்டர், ரூலர் போன்ற புதிய வரையும் டூல்கள் ஐஓஎஸ் 17 அப்டேட்டில் உள்ளது.
செல்வம்
காவிரி: மத்திய அமைச்சருடன் தமிழக எம்.பி-க்கள் நாளை சந்திப்பு!
நீண்ட இடைவெளிக்கு பிறகு குடும்ப கதையில் ஜெயம் ரவி