என் தன்னம்பிக்கையை ரன்வீர் உடைத்துவிட்டார் : அனுராக் காஷ்யப்

பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங்கின் நிர்வாண புகைப்படங்களை பார்த்த போது தன்னுடைய தன்னம்பிக்கை உடைந்துவிட்டதாக, இந்தி திரைப்பட இயக்குனர் அனுராக் காஷ்யப் நகைச்சுவையாக தெரிவித்துள்ளார்.

பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங்கின் நிர்வாண புகைப்படங்கள் ‘பேப்பர்’ இதழில் வெளியானதைத் தொடர்ந்து சர்ச்சைகள் கிளம்பின. இந்த புகைப்படங்கள் பெண்களையும், குழந்தைகளையும் பாதிக்கிறது என்று மும்பை போலீசில் அளிக்கப்பட்ட புகாரின் பேரில், அவர் மீது வழக்குப்பதிவும் செய்யப்பட்டது.

இந்நிலையில் ஆகஸ்ட் 19ஆம் தேதி வெளியாக இருக்கும், ‘டோபாரா’ படத்தின் ப்ரோமோஷன் பணிகளில் ஈடுபட்டிருந்த இந்தி திரைப்பட இயக்குநர் அனுராக் காஷ்யப்பிடம் இதுகுறித்து கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு பதிலளித்த அவர் “ரன்வீர் சிங் அழிவை ஏற்படுத்திவிட்டார். அவருடைய புகைப்படங்கள் இணையத்தில் வைரலான அதே சமயம் என்னுடைய தன்னம்பிக்கையையும் உடைத்துவிட்டது.

அந்த தன்னம்பிக்கையை நான் எப்படி மீண்டும் பெறுவேன். அந்த புகைப்படங்களைப் பார்த்து இந்தியாவில் உள்ள ஒவ்வொருவரும் விரக்தி அடைந்துவிட்டனர். அதனால் தான் ரன்வீர் சிங்கை அனைவரும் விமர்சித்து பேசுகின்றனர்.” என்று நகைச்சுவையாக பதிலளித்துள்ளார்.

அனுராக் காஷ்யப்பின் இந்தப் பேச்சு இணையத்தில் அனைவராலும் பகிரப்பட்டு வருகிறது.

செல்வம்

‘இதயம் ஒரு கோயில்’- இந்தப் பாட்டை இளையராஜா எழுதியது ஏன் தெரியுமா?

[latest_youtube_video channel="UCgFSoS8vu0ONak4z5OBORHw" width="100%" height="450"]

Similar Posts