மீண்டும் பிரதமர் பாதுகாப்பில் குளறுபடி: வைரல் வீடியோ!

டிரெண்டிங்

கர்நாடகாவில் பலத்த பாதுகாப்பையும் மீறி பிரதமர் மோடி அருகே இளைஞர் ஒருவர் செல்ல முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

கர்நாடகாவில் இன்னும் சில மாதங்களில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக பாஜகவும் , காங்கிரஸ் கட்சியும் தீவிரமாக தயாராகி வருகின்றன.

இந்நிலையில், கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் ஒயிட்ஃபீல்ட் – கிருஷ்ணராஜபுரம் இடையிலான மெட்ரோ சேவை உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை தொடங்கி வைப்பதற்காக பிரதமர் மோடி இன்று (மார்ச் 25 ) கர்நாடகா மாநிலத்திற்கு சென்றார். அங்கு பல்வேறு நிகழ்வுகளில் பிரதமர் மோடி பங்கேற்றார்.

பின்னர், சாலை வழியே வாகனத்தில் பொதுமக்களை சந்தித்துக்கொண்டே வந்தார். அப்போது, அவருக்கு பலத்த பாதுகாப்பை காவல்துறையினரும், அவரது பாதுகாவலர்களும் அளித்துக்கொண்டிருந்தனர்.

அந்த சமயத்தில் கூட்டத்தில் நின்று கொண்டிருந்த இளைஞர் ஒருவர் பாதுகாப்பு வளையத்தை மீறி பிரதமர் மோடியை பார்ப்பதற்காக அவரது வாகனம் அருகே ஓடி வந்தார்.

அப்போது, அந்த இளைஞர் பிரதமர் மோடியை நெருங்காமல் இருப்பதற்காக காவல்துறை அதிகாரிகள் உடனடியாக அவரை மடக்கிப்பிடித்து அப்புறப்படுத்தினர்.

இதற்கு முன்னர் ஜனவரி 12 கர்நாடக மாநிலம் ஹுப்பாலியில் பிரதமர் நரேந்திர மோடி சாலை வழியே வாகனத்தில் பொதுமக்களை சந்தித்துக் கொண்டு வந்த போது இளைஞர் ஒருவர் பிரதமரின் கான்வாய் நோக்கி மாலையுடன் ஓடியதும் சரியான நேரத்தில் பிரதமரின் சிறப்பு பாதுகாப்புக் குழுவால் தடுத்து நிறுத்தப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

மு.வா.ஜெகதீஸ் குமார்

காங்கிரஸ் இன்னும் மக்களிடம் செல்லவில்லை: பிரசாந்த் கிஷோர்

’பிரதமர்’ ஸ்டாலின்: ஹெச்.ராஜா டங் ஸ்லிப்!

+1
0
+1
1
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *