வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியவில்லை… செருப்பால் அடித்துக்கொண்ட கவுன்சிலர்!

Published On:

| By Jegadeesh

Andhra councillor hits self with slippers

ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த கவுன்சிலர் ஒருவர் தன்னைத்தானே செருப்பால் அடித்துகொண்ட வீடியோ காட்சி ஒன்று சமூகவலைதளங்களில் இன்று (ஆகஸ்ட் 1) வைரலாகி வருகிறது.

ஆந்திர மாநிலம் அனகாபள்ளி மாவட்டத்தில் உள்ள நரசிபட்டினம் நகராட்சி வார்டு 20 -ல் தெலுங்கு தேசம் கட்சியின் கவுன்சிலராக இருப்பவர் மூலபர்த்தி ராமராஜு.

இவர் தேர்தலின்போது, வார்டில் உள்ள வீடுகளுக்கு குடிநீர் வசதி, சாலை வசதி, கழிவுநீர் வடிகால்கள் உள்ளிட்டவற்றை  தான் கவுன்சிலர் ஆனால் நிறைவேற்றித்தருவேன் என்று மக்களுக்கு வாக்குறுதி அளித்திருந்தார்.

ஆனால், இதில் ஒன்றை கூட தன்னால் தன் வார்டில் உள்ள  மக்களுக்கு செய்ய முடியவில்லையே என்ற விரக்தியில் இருந்துள்ளார்.

இந்நிலையில், நேற்று நடைபெற்ற நகரசபை கூட்டத்தின் போது  ராமராஜு எழுந்து நின்று, ”என்னை நம்பிய மக்களுக்கு தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியவில்லை” எனக்கூறிக்கொண்டே திடீரென தான் அணிந்திருந்த செருப்பை எடுத்து தன்னைத்தானே சரமாரியாக அடித்து கொண்டார். அதன்பின் கூட்டத்தில் இருந்து அழுதபடியே வெளியேறினார்.

பின்னர், இது குறித்து பிடிஐ செய்தி நிறுவனத்திடம் கூறிய மூலபர்த்தி ராமராஜு, “நான் கவுன்சிலராக தேர்ந்தெடுக்கப்பட்டு 31 மாதங்களாகியும், எனது வார்டில் வடிகால், மின்சாரம், சுகாதாரம், சாலைகள் மற்றும் பிற பிரச்சினைகளை தீர்க்க முடியவில்லை.

நிறைவேற்றப்படாத பணிகளைசெய்யுமாறு தனது வாக்காளர்கள்  அடிக்கடி தன்னிடம் கோரிக்கை வைக்கின்றனர். வாக்குறுதிகளை நிறைவேற்றத் தவறியதற்காக இந்த கூட்டத்தில் இறந்து போகக்கூட தயாராக இருக்கிறேன்” என்று கூறியுள்ளார்.

இது தொடர்பான வீடியோ காட்சிகள் தற்போது சமூகவலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.

மு.வா.ஜெகதீஸ் குமார்

பேனா நினைவுச்சின்னம்: அனைத்து மனுக்களையும் தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்

’காக்க.. காக்க’ சூர்யாவுக்கு தந்த நட்சத்திர அங்கீகாரம்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share