An enthusiastic welcome to Sunita Williams who arrived at the space station!

”வந்துட்டேன்னு சொல்லு” – விண்வெளி நிலையத்தில் நடனமாடிய சுனிதா வில்லியம்ஸ்

டிரெண்டிங்

3வது முறையாக விண்வெளி நிலையத்திற்கு சென்ற இந்திய வம்சாவளி விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ்க்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டுள்ளது.

இந்திய வம்சாவளியை சேர்ந்த விண்வௌி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் கடந்த 1998ம் ஆண்டு அமெரிக்காவின் நாசா விண்வௌி ஆய்வு மையத்தில் இணைந்தார்.

இவர் 2006, 2012ல் இரண்டு முறை விண்வௌிக்கு சென்றுள்ளார். இதுவரை 322 நாட்களை அவர் விண்ணில் கழித்திருக்கிறார். இந்நிலையில், 58 வயதான சுனிதா வில்லியம்ஸ் 3ம் முறையாக விண்வௌி செல்ல திட்டமிடப்பட்டது.

சுனிதா வில்லியம்ஸுடன் மேலும் 2 நாசா வீரர்கள் அமெரிக்காவின் தனியார் நிறுவனமான போயிங் தயாரித்துள்ள ஸ்டார்லைனர் விண்கலத்தில் பயணம் செல்ல திட்டமிடப்பட்டு இருந்தது.

கடந்த மே 7ம் தேதி அமெரிக்காவின் விண்வௌி ஆய்வு மையத்தில் இருந்து புறப்பட தயாரான ஸ்டார்லைனர் விண்கலத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது. இதன் காரணமாக 90 நிமிடங்களுக்கு முன் அதன் பயணம் ரத்தானது.

இதையடுத்து ஜூன் 1-ம் தேதி மீண்டும் ஸ்டார்லைனரின் விண்வௌி பயணம் திட்டமிடப்பட்டது. அதன்படி கவுன்டவுன் தொடங்கி 3 நிமிடம் 50 நொடிகளில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக ஸ்டார்லைனரை ஏவுவதில் 2ம் முறை தடை ஏற்பட்டது. இதனால் சுனிதா வில்லியம்ஸ் 3ம் முறை விண்வெளிக்கு செல்லும் திட்டம் தொடர்ந்து ரத்தானது.

இந்நிலையில், இந்திய நேரப்படி ஜூன் 5ஆம் தேதி இரவு 8.22 மணிக்கு சுனிதா வில்லியம்ஸ் விண்வெளிக்கு வெற்றிகரமாக புறப்பட்டுச் சென்றார். புளோரிடாவில் உள்ள கென்னடி விண்வெளி மையத்தில் இருந்து ‘அட்லஸ் 5’ ராக்கெட் மூலம் விண்ணில் ஏவப்பட்ட போயிங் ஸ்டார்லைனர் விண்கலத்தில், சுனிதா வில்லியம் மற்றும் மற்றொரு நாசா வீரர் பேரி வில்மோரும் விண்வெளிக்கு பயணம் மேற்கொண்டனர்.

சுனிதா வில்லியம்ஸ் ஸ்டார்லைனர் விண்கலத்தை இயக்கினார். இந்த விண்கலம் இந்திய நேரப்படி ஜூன் 6 ஆம் தேதி இரவு சர்வதேச விண்வெளி நிலையத்தை அடைந்தது என நாசா தெரிவித்துள்ளது.

இந்த புதிய விண்கலத்தில் செல்லும் முதல் விண்வெளி வீராங்கனை என்ற சாதனையை சுனிதா வில்லியம்ஸ் படைத்துள்ளார். மேலும், சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு சென்ற சுனிதா வில்லியம்ஸ் மற்றும் பெரி வில்மோருக்கு அங்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

சர்வதேச விண்வெளி நிலையத்தை அடைந்ததும் விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் உற்சாக நடனமாடிய வீடியோ இன்று (ஜூன் 7) வெளியாகி சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

அந்த வீடியோவில், விண்வெளி நிலையத்திற்கு சென்றதும் சுனிதா வில்லியம் உற்சாக நடனமாடுவதும், அங்கிருந்த மற்ற விண்வெளி வீரர், வீராங்கனைகள் அவர்களுக்கு வரவேற்பு அளிப்பதும் பதிவாகி உள்ளது.

இந்து

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

அதிவேகத்தில் பஸ்… தடுமாறிய இளைஞர்…மின்னல் முரளியாக மாறிய கண்டக்டர்!

கங்குவா படத்திற்கு போட்டியாக கவினின் “கிஸ்”..? அடுத்தடுத்து ரிலீஸாகும் படங்கள்..!

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *