த்ரெட்ஸ் பாலோவர்ஸ்: கின்னஸ் சாதனை படைத்த யூடியூபர்

Published On:

| By Monisha

guinness record in threads

ட்விட்டருக்கு போட்டியாக களமிறங்கிய த்ரெட்ஸ் செயலியில் முதல் நபராக 1 மில்லியன் பின் தொடர்பவர்களை பெற்று பயனாளர் ஒருவர் கின்னஸ் சாதனை படைத்துள்ளார்.

ட்விட்டரை எலான் மஸ்க் வாங்கியதில் இருந்தே அதில் பல அதிரடி மாற்றங்களை கொண்டு வந்தார். அதிகாரப்பூர்வ கணக்குகளுக்கு கட்டணம் செலுத்த வேண்டும் என்பதில் தொடங்கி நாள் ஒன்றுக்கு ஒரு பயனாளர் எத்தனை பதிவுகளைப் படிக்கலாம் என்பது வரை கட்டுப்பாடுகளை ட்விட்டரில் கொண்டு வந்தார் எலான் மஸ்க்.

இதனால் ட்விட்டர் மீது அதிருப்தியில் பயனாளர்கள் இருந்த நிலையில் தான் ட்விட்டர் போலவே செயல்படும் த்ரெட்ஸ் செயலியை மெட்டா நிறுவன சி.இ.ஓ மார்க் ஜுக்கர்பெர்க் நேற்று (ஜூலை 6) கொண்டு வந்தார்.

த்ரெட்ஸ் அறிமுகமான உடனேயே பலரும் அதனை லாக் இன் செய்ய தொடங்கி விட்டனர். இதனால் அறிமுகமான 7 மணி நேரத்திலேயே த்ரெட்ஸ் 10 மில்லியன் பயனாளர்களை கடந்து சாதனை படைத்தது. அதுமட்டுமின்றி விரைவாக 10 மில்லியன் பயனாளர்களை பெற்ற முதல் செயலி என்ற சாதனையும் படைத்தது.

இந்நிலையில் த்ரெட்ஸ் செயலியில் முதல் நபராக 1 மில்லியன் பின் தொடர்பவர்களை அமெரிக்காவை சேர்ந்த யூடியூபர் “மிஸ்டர் பீஸ்ட்” கின்னஸ் சாதனை படைத்துள்ளார். இவரது உண்மையான பெயர் ஜிம்மி டொனால்ட்சன் ஆகும்.

இதனை கின்னஸ் உலக சாதனை, அதன் அதிகாரப்பூர்வ ட்வீட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளது. இதனைக் கண்ட ஜிம்பி “ஷ்ஷ்ஷ்…. நான் அவர்களை ஏமாற்றுகிறேன் என்று ட்விட்டர் நினைத்து விடும்” என்று கருத்து தெரிவித்துள்ளார்.

தற்போது மிஸ்டர் பீஸ்ட்டை த்ரெட்ஸ் செயலியில் 3 மில்லியன் பேர் பின் தொடர்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

மோனிஷா

மகளிர் உரிமை தொகை ரூ.1000: யாருக்கு உண்டு? யாருக்கு கிடையாது?

பிரதமர் தலையீடு: ஓய்வு அறிவிப்பை வாபஸ் பெற்ற கேப்டன்!