ஷாருக்கான் – டாம் குரூஸ் ஒப்பீடு : அமெரிக்கா எழுத்தாளரை வச்சு செய்த ரசிகர்கள்!

டிரெண்டிங்

பாலிவுட் நடிகர் ஷாருக்கானை ‘இந்தியாவின் டாம் குரூஸ்’ என்று ஒப்பிட்டு அழைத்த அமெரிக்க எழுத்தாளர் ஒருவரை சமூக வலைத்தளங்களில் அவரது ரசிகர்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

4 வருட இடைவெளிக்கு பிறகு ரசிகர்களால் பாலிவுட் பாட்ஷா என்று அழைக்கப்படும் நடிகர் ஷாருக்கான் நடிப்பில் வெளியான திரைப்படம் பதான்.

சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் உருவாகியுள்ள பதான் மூலம் ஷாருக்கான் தன்னை ஒரு முழு அளவிலான ஆக்‌ஷன் ஹீரோவாக நிலைநிறுத்தி கொண்டுள்ளார். அத்துடன் பாய்காட் கலாச்சாரத்தால் துவண்டு போயிருந்த பாலிவுட்டுக்கு பதான் மூலம் நம்பிக்கை கொடுத்துள்ளார் ஷாருக்கான்.

தீபிகா படுகோனே, ஜான் ஆபிரகாம், சல்மான் கான் ஆகியோர் நடித்துள்ள இத்திரைப்படம் வெளியான முதல் நாளில் இருந்து உலகம் முழுவதும் வசூல் சாதனைகளை முறியடித்து வருகிறது.

8வது நாள் முடிவில் இந்தியாவில் மட்டும் ரூ.351 கோடியுடன் உலகம் முழுவதும் வசூலில் ரூ.700 கோடியை பதான் தாண்டியுள்ளது.

இதனையடுத்து உலகம் முழுவதும் உள்ள சினிமா ஆர்வலர்கள் தற்போது ஷாருக்கானின் வெற்றியை பாராட்டி வருகின்றனர்.

அமெரிக்காவைச் சேர்ந்த எழுத்தாளர் ஸ்காட் மெண்டல்சன் என்பவர் தனது கட்டுரையில் ஷாருக்கானை பாராட்டி எழுதியிருந்தார்.

அத்துடன் கட்டுரைக்கான தலைப்பில் ‘இந்தியாவின் டாம் குரூஸ் ஷாருக்கான் தனது பிளாக்பஸ்டர் பதான் மூலம் பாலிவுட்டைக் காப்பாற்றியிருக்கிறார்’ என்று குறிப்பிட்டிருந்தார்.

இதனை அவர் தனது சமூகவலைதள பக்கங்களில் பகிர்ந்த நிலையில், தற்போது அவருக்கு எதிராக ஷாருக்கானின் ரசிகர்கள் கடும் விமர்சனம் ஆற்றி வருகின்றனர்.

ஒரு ரசிகர் ”அதெப்படி ஷாருக்கானை, டாம் குரூஸ்- உடன் ஒப்பீடுவீர்கள்? ஷாருக்கான் போல் வேறு எவரும் இல்லை. அவரை ஒப்பிட்டு அழைப்பது அவமரியாதை என்று தெரிவித்துள்ளனர்.

மற்றொரு பயனர் கருத்து தெரிவிக்கையில், “ஷாருக்கான் ஷாருக்கான் தான். அவர் இந்தியன் டாம் குரூஸ் அல்ல, மாறாக அவர் ஒரு தேசிய பொக்கிஷம், அவர் தனது திரைப்படங்களுக்கு அப்பாற்பட்ட மனிதர்.” என்று குறிப்பிட்டுள்ளார்.

“SRK தான் கிங், மனோபாவம், நடை, உடை, நாடகம், காதல், ஆக்சன் போன்ற பல பரிமாணங்கள் கொண்ட மிகச்சிறந்த நடிகர். அவரை யாரும் இதுவரை நெருங்கவில்லை. இதுபோல் அவரை ஒருபோதும் வேறு யாருடனும் ஒப்பிடாதீர்கள்.” என்று ஒருவர் தெரிவித்துள்ளார்.

அதைத் தொடர்ந்து மற்றொரு பயனர், “மன்னிக்கவும். ஷாருக்கானுக்கு எந்த ஒப்பீடும் இல்லை. ஒரே ஒரு ஷாருக்கான் தான்! அவர் இந்தியா மட்டுமல்ல, உலகளவில் அறியப்படுகிறார் மற்றும் நேசிக்கப்படுகிறார்.

அவர் ஒரு நடிகர் என்பதை தாண்டி உலகெங்கிலும் உள்ள ரசிகர்களுக்கு உத்வேகமாக இருக்கிறார்.” என்று தெரிவித்துள்ளார்.

கிறிஸ்டோபர் ஜெமா

எதிர்பார்ப்பை மிஞ்சி மிரட்டும் ‘தளபதி 67’ டைட்டில்!

ஈபிஎஸ் ஓபிஎஸ் -கட்டாய கல்யாணம்: உச்ச நீதிமன்ற கருத்து பற்றி செம்மலை சீற்றம்!

+1
0
+1
0
+1
0
+1
1
+1
1
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *