america indians are fighting for white rice

அரிசிக்காக சண்டை போடும் அமெரிக்க மக்கள்!

டிரெண்டிங்

உள்நாட்டு விலையைக் கட்டுப்படுத்தவும் தானிய பணவீக்கத்தைக் கட்டுப்படுத்தவும் இந்திய அரசாங்கம் பாஸ்மதி அல்லாத வெள்ளை அரிசி ஏற்றுமதிக்கு உடனடியாக தடை விதித்துள்ளது.

அமெரிக்கா உட்பட 100 நாடுகளுக்கு மொத்த ஏற்றுமதியில் 80% பாஸ்மதி அல்லாத அரிசியை ஏற்றுமதி செய்யும் இந்தியா உலகின் மிகப்பெரிய அரிசி ஏற்றுமதியாளராக ஆதிக்கம் செலுத்தி வருகிறது.

அரிசியை ஏற்றுமதி செய்து வரும் இந்தியா, 2012ஆம் ஆண்டில் இருந்து உலகின் மிகப்பெரிய அரிசி ஏற்றுமதியாளராக இருந்து வருகிறது.

இந்த நிலையில் இந்திய அரசு தற்போது விதித்துள்ள தடையால், அமெரிக்கா, கனடா, சிங்கப்பூர் உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் அரிசி தட்டுப்பாடு ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது.

அமெரிக்காவில் உள்ள இந்தியர்கள், முக்கியமாக தெலுங்கு சமூகம் சோனா மசூரி ரைஸ் சாப்பிடாமல் இருக்க மாட்டார்கள்.

இந்தியாவின் அறிவிப்பை தொடர்ந்து அங்குள்ள பட்டேல் போன்ற பல்வேறு சூப்பர் மார்கெட்டுகளில் இந்திய பிராண்டு அரிசியை வாங்க நீண்ட வரிசையில் மக்கள் தொடர்ந்து நிற்கும் வீடியோ வைரலாகி வருகிறது.

மேலும் பல மாதங்களுக்கு தேவைப்படும் வகையில் அரிசியை, மூட்டை மூட்டைகளாக மக்கள் வாங்கிச் செல்ல கடைகளில் போட்டிப் போடும் சம்பவங்களும் அரங்கேறி வருகின்றன.

இதனை கட்டுப்படுத்த, ஒரு நபருக்கு ஒரு மூட்டை அரிசி மட்டுமே வழங்கப்படும் என்ற விதிமுறையை அங்குள்ள பல்வேறு சூப்பர் மார்கெட் கடைகள் கொண்டுவந்துள்ளன.

இந்திய அரசின் தடை மற்றும் அதிகமாக இருக்கும் தேவையைப் பயன்படுத்தி அங்குள்ள வியாபாரிகள்  ஒவ்வொரு ஒரு பவுண்டு பையின் விலை 8 அமெரிக்க டாலருக்கு விற்று வருகின்றனர்.

அதாவது 1 பவுண்டு என்பது 453 கிராம். 8 அமெரிக்க டாலர் என்பது இந்திய மதிப்பில் 656 ரூபாயாக உள்ளது. எனவே தற்போதைய நிலவரப்படி அமெரிக்காவில் 1 கிலோ அரிசி என்பது சுமார் ரூ.1,500 வரை உயர்ந்துள்ளது.

விலைவாசி உயர்வும், பற்றாக்குறையும் அமெரிக்காவில் வசிக்கும் இந்தியர்களை பதற்றத்தில் ஆழ்த்தியுள்ளது.

கிறிஸ்டோபர் ஜெமா

70 ஆயிரம் பேருக்கு பணி ஆணை வழங்கிய மோடி

மணிப்பூர் விவகாரம் : அதிமுக இரட்டை வேடமா?

 

+1
0
+1
2
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *