இளம் வயதிலயே தமிழ் சினிமாவில் வடிவேலுவுடன் இணைந்து பல காமெடி கட்சிகளில் நடித்தவர் சங்கர்..
முக்கியமாக, மயானத்தில் பிணத்தை அடிக்கும் காட்சி, ‘கருப்பசாமி குத்தகைதாரர்’ படத்தில் பைக்கின் முன் விழும் காட்சிகள் யாராலும் மறக்க முடியாதது..

பின்னர் ‘அம்பாசமுத்திரம் அம்பானி’ படத்தில் கருணாசுடன் படம் முழுக்க இணைந்து நடிக்கவே அதிலிருந்து அவர் பெயர் அம்பானி சங்கராக நிலைத்துவிட்டது.
இதற்கு பின் பட வாய்ப்புகள் குறையவே `Thirsty crow’ என்ற பெயரில் யூ-ட்யூப் சேனல் தொடங்கி நகைச்சுவை வீடியோக்களை பதிவிட்டு பெருமளவில் வரவேற்பையும் பெற்று வருகிறார் அம்பானி சங்கர்.
இந்நிலையில் வட இந்தியாவைச் சேர்ந்த நபரொருவர் ஜியோ நிறுவனம் தொடர்பாகவும், பணத்தை திரும்ப பெறுதல் தொடர்பாகவும் புகார் ஒன்றை டிவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
அந்த பதிவில் ஜியோ கேர், ஜியோ செய்தி, அம்பானி குடும்பம் என பலரையும் டேக் செய்துள்ளார். அப்போது அம்பானி சங்கர் என்ற பெயரில் இருந்த சங்கரையும் டேக் செய்யவே பதறிப் போன சங்கர்..
இதுகுறித்து “வடக்கன்ஸ் நான் ஏதோ அம்பானி குடும்பத்தை சேர்ந்தவன்னு நினைச்சு என்னைய டேக் பண்றாங்க” என ட்வீட் ஒன்றை பதிவு செய்துள்ளார் அம்பானி சங்கர்,
அந்த ட்வீட் பலருக்கும் சிரிப்பை ஏற்படுத்திய நிலையில் தற்போது வைரல் மீம்களாக பரவி வருகிறது.
‘ராக்கெட்ரி’ திரைப்படம் : 90 % கட்டுகதை’ – விஞ்ஞானிகள் புகார்!