டெலிகாம் துறையில் முன்னணியில் இருக்கும் ஜியோ, இலவச அழைப்பு, டேட்டா என்பதோடு நிறுத்திக் கொள்ளாமல் அமேசான் பிரைம், நெட்பிளிக்ஸ், ஹாட்ஸ்டார் போன்ற ஓடிடி சந்தாக்களையும் இலவசமாக கொடுத்து வாடிக்கையாளர்களை தன்வசப்படுத்தியுள்ளது.
ப்ரீப்பெய்ட் ரீசார்ஜில் பெரும்பாலும் ஹாட்ஸ்டார் ஒன்றை மட்டும் இலவசமாக கொடுக்கும் ஜியோ, போஸ்ட்பெய்ட் திட்டத்தில் அமேசான் மற்றும் நெட்பிளிக்ஸை கொடுத்து கவர்ந்து வருகிறது.
இது ப்ரீப்பெய்ட் வாடிக்கையாளர்களுக்கு கொஞ்சம் ஏமாற்றமாகவும் இருக்கிறது. அமேசான் பிரைம் மற்றும் நெட்பிளிக்ஸ் இலவசமாக கொடுக்கும் ஜியோவின் போஸ்ட்பெய்ட் பிளானின் விலை ரூ. 399.
இந்தத் திட்டத்தில், அகில இந்தியாவில் உள்ள எந்த நெட்வொர்க்கிலும் அன்லிமிட்டெட் அழைப்பின் பலன் உங்களுக்கு வழங்கப்படுகிறது. இது தவிர பயனர்களுக்கு 75 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது.
அதுமட்டுமல்லாமல், இணையத்தை பயன்படுத்தாதபோது, 200 ஜிபி டேட்டா ரோல் ஓவர் அம்சமும் கூடுதலாக வழங்கப்படுகிறது.
இந்தத் திட்டத்தில் இன்னும் கூடுதலாக வாடிக்கையாளர்களுக்கு ஜியோ, Netflix மற்றும் Amazon Prime சந்தாக்களை முற்றிலும் இலவசமாக வழங்குகிறது. இந்தத் திட்டத்தில் கிடைக்கும் பலன்களைப் பெற விரும்பினால், நீங்கள் போஸ்ட்பெய்டு இணைப்பிற்கு மாறலாம்.
இது உங்களுக்குப் பெரிதும் பயன்படும். உலகம் முழுவதும் ரிலீஸாகும் பிரபலமான திரைப்படங்கள், வெப்சீரிஸ்களை நீங்கள் இலவசமாக கண்டு ரசிக்க முடியும்.
மு.வா.ஜெகதீஸ் குமார்
பிரபல ஸ்குவிட் கேம் நடிகர் மீது பாலியல் புகார்!
அதுக்கு காரணம் காங்கிரஸ் தான்: அசாதுதீன் ஓவைசி குற்றச்சாட்டு!