தொடங்கியது அமேசானின் GREAT INDIAN FESTIVAL!

டிரெண்டிங்

பிரபல ஆன்லைன் வர்த்தக தளமான அமேசான் ஒவ்வொரு வருடமும் GREAT INDIAN FESTIVAL என்கிற வருடாந்திர கிளியரன்ஸ் சேல் அறிவிப்பது வழக்கம். அதேபோல் இந்த வருடமும் அக்டோபர் 8 ஆம் தேதி முதல் GREAT INDIAN FESTIVAL தொடங்கும் என்கிற அறிவிப்பை வெளியிட்டது.

அமேசான் நிறுவன அறிவிப்பின்படி நாளை தொடங்குகிறது GREAT INDIAN FESTIVAL தள்ளுபடி விற்பனை. ஆனால் அமேசானில் ப்ரைம் வாடிக்கையாளர்களாக உள்ளவர்களுக்காக ஒரு நாள் முன்னதாக அதாவது இன்றே (அக்டோபர் 7) தள்ளுபடி விற்பனையை தொடங்கியுள்ளது அமேசான்.

GREAT INDIAN FESTIVAL என்றாலே தள்ளுபடி தான். நாம் மற்ற நாட்களில் வாங்கும் விலையை விட இந்த தள்ளுபடி காலங்களில் விலை குறைவாகவே கிடைக்கும்.

அமேசான் நிறுவனம் GREAT INDIAN FESTIVAL விற்பனையில் 10 சதவிகிதம் முதல் 90 சதவிகிதம் வரை தள்ளுபடியை அறிவிக்கும். இந்த வருடத்திற்கான பொருட்களை விற்றுவிட ஆன்லைன் தளங்களும், வருடத்தின் மற்ற மாதங்களில் வாங்க முடியாத விலை கூடுதலான பொருட்களை வாங்க மக்களும் என திருவிழாவைப்போல் களைகட்டும் இந்த விற்பனை.

ஸ்மார்ட் போன், ஐபோன், லேப்டாப், விட்டு உபயோகப் பொருட்கள் என அனைத்தும் 90 சதவிகிதம் வரை தள்ளுபடி விலையில் விற்பனைக்கு வருகிறது.

நாளை அமேசான் மட்டுமல்லாது ப்ளிப்கார்ட்டிலும் THE BIG BILLION DAYS தொடங்குகிறது அக்டோபர் 8 ஆம் தேதி தொடங்கி 15 ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

ஒரு ஆன்லைன் தளத்தில் தள்ளுபடி விற்பனை என்றாலே மகிழ்சி, இப்போது இரண்டிலும் என்றால் இரட்டிப்பு மகிழ்ச்சி தானே.

பவித்ரா பலராமன்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

ரகுமான் பெயர் சொல்லாமல்… வைரமுத்துவின் வஞ்சப்புகழ்ச்சி?

இஸ்ரேலில் போர் பதற்றம்… 22 பேர் பலி: அவசர நிலை பிரகடனம்!

 

+1
0
+1
0
+1
2
+1
1
+1
0
+1
1
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *