ட்விட்டர், பேஸ்புக் வரிசையில் அமேசான்… ஊழியர்கள் கலக்கம்!

Published On:

| By christopher

ட்விட்டர், பேஸ்புக் நிறுவனங்களை தொடர்ந்து இந்த வாரம் முதல் 10,000 பேரை பணிநீக்கம் செய்ய அமேசான் திட்டமிட்டுள்ளதாக நியூயார்க் டைம்ஸ் தெரிவித்துள்ளது.

அமெரிக்காவைச் சேர்ந்த உலகின் மிகப் பெரிய இ-காமர்ஸ் நிறுவனமாக அமேசான் விளங்குகிறது.

கடந்த ஆண்டு டிசம்பர் 31ம் தேதி நிலவரப்படி, அமேசானில் உலகம் முழுவதும் சுமார் 16 லட்சத்துக்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணிபுரிந்து வருகிறார்கள்.

இந்நிலையில், தனது பொருளாதார வீழ்ச்சியைத் தடுக்க ஊழியர்களை பணிநீக்கம் செய்ய அமேசான் முடிவெடுத்துள்ளதாக கூறப்பட்டு வந்தது.

அதன்படி தற்போது அமேசானின் சாதனங்கள் பிரிவு, குரல் உதவி அலெக்சா, சில்லரை வணிகம் மற்றும் மனித வள மேம்பாட்டுத் துறையில் இருக்கும் சுமார் 10,000 ஆயிரம் பேரை இந்த வாரம் முதல் பணிநீக்கம் செய்ய உள்ளதாக தி நியூயார்க் டைம்ஸ் பத்திரிக்கை செய்தி வெளியிட்டுள்ளது.

அமேசான் நிறுவன வரலாற்றில் இதுவே மிகப் பெரிய பணிநீக்க அறிவிப்பு எனவும் அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கடந்த வாரம், ட்விட்டர், பேஸ்புக், மைக்ரோசாப்ட் போன்ற நிறுவனங்கள் மொத்தமாக 11,000 க்கும் மேற்பட்ட ஊழியர்களை பணி நீக்கம் செய்திருந்தது.

இந்நிலையில் அமேசானும் பணிநீக்க நடவடிக்கையில் இறங்க உள்ள செய்தி அதில் பணிபுரியும் ஊழியர்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

கிறிஸ்டோபர் ஜெமா

டாப் 10 செய்திகள்: இதை மிஸ் பண்ணாதீங்க..!

கிச்சன் கீர்த்தனா : மூலிகை பூரி

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel