நடிகர் அல்லு அர்ஜுன் காரில் சென்று கொண்டிருக்கும்போது தனது மகளை கொஞ்சி விளையாடும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் அல்லு அர்ஜுன். இவர் நடிப்பில் கடந்த 2021 ஆம் ஆண்டு வெளியான புஷ்பா திரைப்படம் மிகப்பெரிய வசூல் சாதனை செய்தது. இந்தப்படத்தை சுகுமார் இயக்கியிருந்தார்.
இதற்கிடையில் அல்லு அர்ஜுன் புஷ்பா படத்தின் 2 ஆம் பாகமான ’’புஷ்பா – தி ரூல்’’ படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இதனிடையே கடந்த ஏப்ரல் 9 ஆம் தேதி அல்லு அர்ஜுன் தனது 41வது பிறந்தநாளை கொண்டாடினார். இதனை முன்னிட்டு புஷ்பா படத்தின் 2 ஆம் பாகத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது.
காளி உருவத்தில் கம்பீரமான தோற்றத்தில், ஜிமிக்கி, மூக்குத்தி, வளையல்கள், ஒட்டியாணம் உள்ளிட்ட நகைகள் அணிந்து எலுமிச்சை மாலையுடன் புடவையில் நிற்கும் போஸ்டரை பார்த்த ரசிகர்கள் மிரண்டு போயினர்.
இந்நிலையில், அல்லு அர்ஜுன் சமூக வலைதள பக்கத்தில் மகள் அல்லு அர்ஹாவை கொஞ்சி விளையாடும் வீடியோவை வெளியிட்டுள்ளார். பொதுவாக அவர் தனது குழந்தைகளான அயன் மற்றும் அர்ஹாவுடன் நேரத்தை செலவிடுவதை இணையத்தில் அடிக்கடி பார்க்கலாம்.
அதன்படி , அல்லு அர்ஜுன் வெளியிட்டுள்ள வீடியோவில், அப்பா-மகள் இருவரும் ஒருவரையொருவர் கொஞ்சுவதோடு பின்னணியில் இளையராஜாவின் ’தும்பி வா’ என்ற மலையாளப் பாடலின் பின்னணி இசை ஓடிக் கொண்டிருக்கிறது. இந்த வீடியோவை பார்த்த பலரும் அப்பா – மகள் பாசத்தை கமெண்ட்களாக பதிவிட்டு வருகின்றனர்.
மு.வா.ஜெகதீஸ் குமார்