பியூட்டி டிப்ஸ்: லிப்ஸ்டிக்கே பயன்படுத்தாதவர்களின் வாயைச் சுற்றி அலர்ஜி… காரணம் என்ன?

Published On:

| By christopher

Allergy around the mouth

அழகை மேம்படுத்திக் கொள்வதற்காகவும், அலுவலகத்தில் அவசியம் பயன்படுத்த வேண்டும் என்பதற்காகவும் தினமும் லிப்ஸ்டிக் பயன்படுத்தும் வழக்கம் அதிகரித்து வருகிறது. இதனால் வாயைச் சுற்றி அலர்ஜி போன்று ஏற்படும் என்றும் இதற்கு லிப்ஸ்டிக்தான் காரணமாக இருக்கும் என்றும் சொல்கிறார்கள் சிலர்.

அது உண்மையா?  இதற்கு என்ன தீர்வு?  லிப்ஸ்டிக் பயன்படுத்தும்போது கவனிக்க வேண்டிய விஷயங்கள் என்னென்ன? சருமநல மருத்துவர்கள் தரும் விளக்கம் என்ன?

“லிப்ஸ்டிக்கில் பிரதானமாகச் சேர்க்கப்படுபவை ‘டை’ (Dyes) வகைகள். ஒவ்வாமைக்கு காரணமான முக்கியமான விஷயங்களில் டைக்கு முதலிடம் உண்டு.

அதற்கடுத்த இடம் வாசனைப் பொருட்களுக்கு. பெரும்பாலான அழகு சாதனங்களில் வாசனைப் பொருட்கள் சேர்க்கப்படுகிறது. அதுவும் அலர்ஜியை ஏற்படுத்தும்.

லிப்ஸ்டிக்கை பொறுத்தவரை டை மட்டுமன்றி, பீ வாக்ஸ், பெட்ரோலியம்  போன்றவையும் சேர்க்கப்படுகின்றன. அவையும் அலர்ஜியை ஏற்படுத்தலாம்.

Perioral Dermatitis and Causes of a Red Ring Around the Lips

லிப்ஸ்டிக் பயன்படுத்தும் வழக்கம் உள்ளவர்கள், சிவப்பு, அடர் பிங்க் போன்ற மிகவும் டார்க் ஷேடுகளை தவிர்ப்பது நல்லது. அதேபோல  மேட் ஃபினிஷ் லிப்ஸ்டிக்கையும் தவிர்க்க வேண்டும். அந்த வகை லிப்ஸ்டிக், உதடுகளை வறண்டுபோகச் செய்து, வெடிப்புக்கும் காரணமாகும்.

லிப்ஸ்டிக்கை பொறுத்தவரை மாய்ஸ்ச்சரைசர் உள்ளதாகப் பார்த்துத் தேர்வு செய்வது சிறந்தது. சிவப்பு நிற லிப்ஸ்டிக்கில் ஒருவித டை, ப்ளம் நிற லிப்ஸ்டிக்கில் ஒருவித டை என ஒவ்வொரு ஷேடுக்கும் ஒவ்வொருவித டை சேர்க்கப்படும். அவை அனைத்துமே அலர்ஜியை உண்டாக்குபவை. எனவே, கூடியவரையில் லிப்ஸ்டிக்கை குறைவாகப் பயன்படுத்துவதே சிறந்தது.

எப்படிப் பயன்படுத்துகிறோம் என்பதும் இதில் கவனிக்கப்பட வேண்டும். உதாரணத்துக்கு, லிப்ஸ்டிக்கை திறந்து அதை நேரடியாக அப்படியே உதடுகளில் தடவாமல், முதலில் லிப் பாம் தடவிவிட்டு அதன் பிறகு லிப்ஸ்டிக் பயன்படுத்தினால் பாதுகாப்பு லேயர் போல அமையும்.

மேட் ஃபினிஷ் லிப்ஸ்டிக்கை தவிர்க்கவும். இப்போதெல்லாம் தரமான லிப்ஸ்டிக் கிடைக்கிறது. அவற்றைத் தேர்வுசெய்து உபயோகிக்கலாம்.

லிப்ஸ்டிக்கே பயன்படுத்தாதவர்களில் சிலருக்கு வாயைச் சுற்றி அலர்ஜி ஏற்பட காரணம்….

நெயில் பாலிஷ். நகங்களைக் கடிக்கும் வழக்கம் உள்ளவர்களுக்கு, நெயில் பாலிஷ் அலர்ஜியால் வாயைச் சுற்றி பாதிப்பு ஏற்படலாம்.

குறிப்பாக, சிவப்பு மாதிரியான அடர் ஷேடு நெயில்பாலிஷ் உபயோகிப்பவர்களாக இருப்பார்கள். எனவே, லிப்ஸ்டிக், நெயில் பாலிஷ் போன்றவற்றை உபயோகிப்பவர்கள் அவற்றைத் தேர்ந்தெடுப்பதிலும், உபயோகிப்பதிலும் மிகுந்த கவனமாக இருக்க வேண்டியது அவசியம்.

லிப்ஸ்டிக் உபயோகிப்பதில் காட்டும் ஆர்வத்தை, அதை முறையாக நீக்குவதிலும் காட்ட வேண்டும்” என்று விளக்கமளிக்கிறார்கள்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

டாப் 10 நியூஸ் : அதிமுக – ஆளுநர் சந்திப்பு முதல் இந்தியன் 2 டிரைலர் ரிலீஸ் வரை!

கிச்சன் கீர்த்தனா : கீரை கட்லெட்

டிஜிட்டல் திண்ணை: திமுக கூட்டணியை உடைக்க, டெல்லி காய்ச்சும் கள்ளச்சாராயம்!

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம்: பலி எண்ணிக்கை 59 ஆனது!

தெற்கு- வடக்கு… சூப்பர் ஸ்டார்களை இயக்கும் அட்லி: உற்சாகத்தில் ரசிகர்கள்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share