16 கேப்டன்களின் க்யூட் செல்ஃபி!

டிரெண்டிங்

டி20 உலகக் கோப்பையில் விளையாடவிருக்கும் அணிகளின் கேப்டன்கள் அனைவரும் ஒன்றாக எடுத்துக் கொண்ட புகைப்படத்தை ஐசிசி இன்று (அக்டோபர் 15) தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளது.

இந்த ஆண்டிற்கான டி20 உலகக் கோப்பை போட்டிகள் நாளை(அக்டோபர் 16) ஆஸ்திரேலியாவில் தொடங்கவிருக்கிறது.

இந்த போட்டியில் மொத்தமாக 16 அணிகள் பங்கேற்கின்றன. இதில் இந்திய அணி நேரடியாக அக்டோபர் 23ஆம் தேதி நடைபெறும் சூப்பர் 12சுற்றில் பாகிஸ்தான் அணியுடன் மோதவுள்ளது.

all 16 captions in one frame icc shared the photo in twitter

இதற்காக ரோகித் ஷர்மா தலைமையிலான இந்திய அணி வீரர்கள் கடந்த 6 ஆம் தேதி ஆஸ்திரேலியாவிற்குப் புறப்பட்டுச் சென்று அங்குப் பயிற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் இந்திய வீரர்கள் ஷர்துல் தாக்கூர், முகமது ஷமி, முகமது சிராஜ் ஆகியோர் மாற்று வீரர்களாகக் கடந்த இரு தினங்களுக்கு முன்பு ஆஸ்திரேலியா சென்றனர்.

இந்நிலையில் அனைத்து அணியின் கேப்டன்களும் சேர்ந்து எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் மற்றும் செல்ஃபிக்களை ஐசிசி தனது ட்விட்டர் பக்கத்தில் இன்று (அக்டோபர் 15) பகிர்ந்துள்ளது.

“செல்ஃபி டைம்” “அனைத்து 16 கேப்டன்களும் ஒரே ஃபிரேம்ல்” என்று ஐசிசி குறிப்பிட்டுள்ளது. வெவ்வேறு அணிகளாக இருந்தாலும் ஒரே புகைப்படத்தில் இணைந்திருப்பது பார்வையாளர்களைக் கவர்ந்துள்ளது.

அதுமட்டுமின்றி இன்று பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாமின் 28வது பிறந்தநாளை அனைவரும் இணைந்து கொண்டாடியுள்ளனர்.

பாபர் அசாம் பிறந்தநாள் கொண்டாட்டத்தின் எடுக்கப்பட்டப் புகைப்படங்களையும் ஐசிசி ட்விட்டரில் பகிர்ந்து “கேக் பார்ப்பதற்கு நன்றாக இருக்கிறது” என்று குறிப்பிட்டுள்ளது.

பாகிஸ்தான் அணியின் உடை பச்சை நிறத்தில் இருப்பதால், பாபர் அசாமின் பிறந்தாள் கேக்கும் பச்சை நிறத்தில் கிரிக்கெட் மைதானம் போன்று காட்சியளிப்பது பார்ப்பதற்கு மிகவும் அழகாக இருக்கிறது.

அனைத்து அணிகளின் கேப்டன்களும் செல்ஃபி எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் மற்றும் பாபர் அசாமின் பிறந்தநாள் கொண்டாட்டத்தின் புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது.

மோனிஷா

ஆசியக் கோப்பை: 7வது முறையாக வென்ற இந்தியா!

பன்னீர் வீடு: கொள்ளைப்போன டிவி!

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
1
+1
0