அஜித் நடித்துள்ள துணிவு படம் வெளியாகி வெற்றி பெற வேண்டும் என்று சபரிமலையில் பக்தர்கள் வேண்டுதல் வைத்துள்ளனர்.
நடிகர் அஜித் தற்போது துணிவு என்ற படத்தில் நடித்து வருகிறார். அஜித் மற்றும் இயக்குநர் எச். வினோத் கூட்டணியில் நேர்கொண்ட பார்வை, வலிமை ஆகிய படங்களைத் தொடர்ந்து மூன்றாவது படமாகத் துணிவு அமைந்துள்ளது.
இப்படத்தில் அஜித்திற்கு ஜோடியாக மஞ்சு வாரியர் நடித்துள்ளார். போனி கபூர் தயாரிக்கும் இப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார்.
துணிவு படத்தின் ஃபஸ்ர்ட் லுக் மற்றும் முதல் பாடல் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது. துணிவு படம் அடுத்த ஆண்டு பொங்கலுக்கு வெளியாக உள்ளது.
தற்போது விஜய் நடிப்பில் உருவாகி வரும் வாரிசு படமும் பொங்கலுக்கு வெளியாக உள்ளது என்று படக்குழு அறிவித்துள்ளது. நடிகர் விஜய் மற்றும் அஜித் ஆகிய முன்னணி நடிகர்களின் படங்கள் ஒரே நேரத்தில் வெளியாக உள்ளதால் ரசிகர்கள் தாங்கள் விரும்பும் ரசிகர்களின் படம் வெற்றி பெற வேண்டும் என்று ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் அஜித் நடிப்பில் வெளியாக உள்ள துணிவு படம் வெற்றி பெற வேண்டும் என்று வேலூர் மாவட்டம் ஆம்பூரைச் சேர்ந்த அஜித் ரசிகர்கள் சிலர் துணிவு படத்தின் போஸ்டர் உடன் சபரிமலையில் வேண்டுதல் வைத்துள்ளனர். அந்த போஸ்டரில் ”துணிவு படம் வெற்றி பெற வேண்டுகிறோம்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
தற்போது அஜித் ரசிகர்களின் இந்த செயல் மற்றும் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
மோனிஷா
‘வாரிசு’ படத்துக்கு வந்த புதிய சிக்கல்!
புதிய படத்துக்காக எச்.வினோத் – தனுஷ் போட்ட கணக்கு!