ஆப்பிள் நிறுவனம் தனது ‘It’s Glow Time’ நிகழ்ச்சியில் ஐபோன் 16 தொடர் போன்களுடன், ஏர்பாட்ஸ் 4 இயர்போனையும் அறிமுகம் செய்துள்ளது.
இந்த ஏர்பாட்ஸ் 4 இயர்போன் 2 வகைகளில் அறிமுகமாகியுள்ளது. அதில் சாதாரண ஏர்பாட்ஸ் 4 ரூ.12,900 என்ற விலைக்கும், நாய்ஸ் கேன்சலஷன் திறன் கொண்ட ஏர்பாட்ஸ் 4 ரூ.17,900 என்ற விலைக்கும் விற்பனையாவுள்ளது.
இந்த ஏர்பாட்ஸ் 4 இயர்போனுக்கான முன்பதிவு ஏற்கனவே துவங்கியுள்ள நிலையில், இந்த இயர்போன் செப்டம்பர் 20 அன்று விற்பனைக்கு வரவுள்ளது.
மேலும், இந்த ஏர்பாட்ஸ் 4 இயர்போனை அமெரிக்கன் எக்ஸ்பிரெஸ், ஐசிஐசிஐ, ஆக்சிஸ் வங்கிகளின் கார்டுகளை பயன்படுத்து வாங்கினால், ரூ.4,000 வரை உடனடி தள்ளுபடி வழங்கப்படும் என்றும் ஆப்பிள் நிறுவனம் தெரிவித்துள்ளது.
அதுமட்டுமின்றி, நீங்கள் வாங்கும் ஏர்பாட்ஸ்களில் உங்களுக்கு பெயர், இனிசியல் அல்லது எமோஜிக்களை இலவசமாக பொறித்துக்கொள்ளும் வசதியையும் ஆப்பிள் நிறுவனம் வழங்கியுள்ளது.
இந்த ஏர்பாட்ஸ் 4-இல் H2 ஹெட்போன் சிப் பொருத்தப்பட்டுள்ளது. தூசி, வியர்வை, தண்ணீரால் எந்த பாதிப்பும் ஏற்படாத வகையில் இந்த ஏற்பாட்ஸ் தயாரிக்கப்பட்டுள்ளது.
இந்த ஏர்பாட்ஸ் 4 வாய்ஸ் ஐசோலேஷன் வசதியை கொண்டுள்ளது. இதன்மூலம், தொலைபேசி அழைப்புகளின்போது, பின்புறத்தில் இடையூறாக சத்தம் ஏற்பட்டால், அதை கட்டுப்படுத்திக்கொள்ளலாம்.
டைப்-சி சார்ஜர் மூலம் சார்ஜ் செய்துகொள்ளும் வசதி கொண்டுள்ள இந்த ஏர்பாட்ஸ் 4-ஐ, ஒரு முறை முழுமையாக சார்ஜ் செய்தால், சார்ஜிங் கேஸுடன் 30 மணி நேரமும், இயர்போனில் மட்டும் 5 மணி நேரமும் பாடல்கள் கேட்க முடியும்.
இப்படி பல சிறப்பான அம்சங்களுடன் அறிமுகமாகியுள்ள ‘ஏர்பாட்ஸ் 4’, சுற்றுச்சூழலை பாதிக்காத வண்ணம் தயாராகியுள்ளதாக ஆப்பிள் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்த ஏர்பாட்ஸ் 4-ஐ தயாரிக்க, 100% மறுசுழற்சி செய்யப்பட்ட தகரம், தங்கம், செம்பு மற்றும் அரிய பூமி கூறுகள் பயன்படுத்தப்பட்டுள்ளதாக ஆப்பிள் நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும், இதில் பயன்படுத்தப்பட்டுள்ள பிளாஸ்டிக்கில், 50% மறுசுழற்சி செய்யப்பட்டது என்றும் ஆப்பிள் நிறுவனம் தெரிவித்துள்ளது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
– மகிழ்
மிரட்டலான ஐபோன் 16 ப்ரோ, 16 ப்ரோ மேக்ஸ்: இவ்வளவு விலையா?
புதிய வசதிகளுடன் அறிமுகமான ஐபோன் 16, 16 பிளஸ்: விலை என்ன?