AI தொழில்நுட்பம் பல வகையில் உதவிகரமாக இருந்தாலும், அதில் அடங்கி இருக்கும் ஆபத்துக்களும் ஏராளம். சமீபத்தில் வெளியான டீப்பேக் எடிட் செய்யப்பட்ட நடிகைகளின் ஆபாச படங்கள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. AI technology YouTube norms
புகைப்படங்கள் மட்டுமின்றி குரல்களை பயன்படுத்தி எடிட் செய்வதும் அதிக அளவில் பகிரப்பட்டு வருகிறது. இதில் சில பார்ப்பதற்கும், கேட்பதற்கும் நன்றாக இருந்தாலும் அதன்பின் இருக்கும் பாதிப்புகளோ மிக அதிகம்.
இதுபோன்ற போலி வீடியோக்களை உருவாக்கினால் மூன்று ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படும் என்று மத்திய அரசு எச்சரிக்கை செய்திருக்கிறது.
இந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்தி ஒருவர் பேசாத மற்றும் செய்யாத செயல்கள், காட்சிகள் மற்றும் ஆடியோக்களை உருவாக்க முடியும்.
இது தனிமனித வாழ்க்கையில் மட்டுமல்லாமல், சமுதாயத்திலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும். தேர்தல் சமயத்தில் இந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்தி ஏதேனும் காட்சிகளையோ அல்லது ஆடியோவையோ உருவாக்கினால் அது பெரும் குழப்பத்தில் போய் முடிய அதிக அளவில் வாய்ப்புகள் உள்ளது.
இதற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்க களமிறங்கியுள்ளது YouTube. இது தொடர்பாக தங்களது வலைதள பக்கத்தில் YouTube-ன் துணைத் தலைவர் எமிலி மேக்ஸ்லே மற்றும் ஜெனிஃபர் பதிவிட்டுள்ளதாவது,
அடுத்து வரும் மாதத்தில் AI மூலம் உருவாக்கப்படும் வீடியோக்களை கட்டுப்படுத்த புதிய விதிமுறைகள் உருவாக்கப்படும் என்று உறுதி தெரிவித்துள்ளனர்.
விதிமுறைகள்:
வீடியோவின் உண்மைத் தன்மை பற்றி ஆராய்ந்து AI தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்டது என்று தெரியவந்தால் சித்தரிக்கப்பட்டது என்று குறிப்பிட்டு அப்லோட் செய்யப்படும்.
ஒருவேளை ஆபாசமாக சித்தரிக்கப்பட்ட காட்சி அல்லது உரிய அனுமதி இல்லாத வீடியோக்களை அப்லோட் செய்ததாக புகார் வந்தால்,
விதிகளை மீறியதாக கருதப்பட்டு சேனல் முடக்கப்படும், வருவாய் நிறுத்தப்படும் மற்றும் சட்ட ரீதியிலான நடவடிக்கையும் எடுக்கப்படும்.
YouTube மட்டுமின்றி மெட்டா நிறுவனத்தின் Facebook, Instagram போன்ற சமூக வலைதளங்களும் AI தொழில்நுட்பத்தை கட்டுப்படுத்துவது குறித்து ஆலோசனையில் உள்ளனர். AI technology YouTube norms
-பவித்ரா பலராமன்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
அனைத்து கார்களையும் வாடகைக்கு இயக்கலாம்: போக்குவரத்து துறை அனுமதி!