main reason for job cuts

ஊழியர்களை பணிநீக்கம் செய்யும்… உலகின் முன்னணி நிறுவனங்கள்… காரணம் என்ன?

டிரெண்டிங்

உலகத்தின் மிகப்பெரிய நிறுவனங்களில் ஒன்றான கூகுளும் தற்போது பணிநீக்க நடவடிக்கைகளில் ஈடுபடப் போவதாக அறிவித்துள்ளது. main reason for job cuts

கொரோனாவிற்கு பின் கொஞ்சம் ஓய்ந்திருந்த பணிநீக்கம் தொடர்பான நடவடிக்கைகள் தற்போது மீண்டும் வேகமெடுக்க ஆரம்பித்து இருக்கின்றன.

சமீபத்தில் அமேசான் நிறுவனம் 5௦௦ ஊழியர்களை பணிநீக்கம் செய்திருந்தது. அந்நிறுவனம் வெளிப்படையாக  அறிவிக்காவிடினும், பணிநீக்கம் செய்யப்பட்ட ஊழியர்களின் எண்ணிக்கை தற்போது தெரிய வந்துள்ளது.

இதேபோல இந்தியாவின் பிளிப்கார்ட் நிறுவனமும் சுமார் 1500 ஊழியர்களை பணிநீக்கம் செய்யப் போவதாக தகவல்கள் வெளியாகின.

இந்தநிலையில் கூகுள் நிறுவனமும் பணிநீக்க நடவடிக்கைகளில் ஈடுபடப்போவதாக அறிவித்துள்ளது. இதை அந்த நிறுவனத்தின் சிஈஓ சுந்தர் பிச்சை உறுதிப்படுத்தி இருக்கிறார்.

கடந்த ஆண்டு கூகுள் நிறுவனம் 12000 ஊழியர்களை பணிநீக்கம் செய்திருந்தது. இந்த ஆண்டு அதுகுறித்த தகவல் எதுவும் வெளியாகவில்லை.

என்றாலும் விற்பனைப்பிரிவு, யூடியூப் என ஆகியவற்றில் இந்த பணிநீக்கம் இருக்கும் என தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

இதேபோல மார்க் சக்கர்பெர்க்கின் மெட்டா நிறுவனம் சுமார் 6௦ ஊழியர்களை பணிநீக்கம் செய்துள்ளது. தொழில்நுட்ப நிரல் மேலாளர் பிரிவில் தான் அதிகளவு ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டு இருக்கின்றனர்.

இந்த வரிசையில் மைக்ரோசாப்ட் நிறுவனமும் ஆயிரக்கணக்கான ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நடவடிக்கைகளில் இறங்கியுள்ளது.

நிறுவனங்களின் மறுசீரமைப்பு தான் காரணம் என இந்த பணிநீக்கம் குறித்து அந்நிறுவனங்கள் தெரிவித்தாலும், உண்மையான காரணம் வேறாக இருக்கிறது.

அதாவது கூகுள் மற்றும் மெட்டா நிறுவனங்கள் பில்லியன் கணக்கான டாலர்களை ஏஐ (AI) தொழில்நுட்பத்தில் முதலீடு செய்ய ஆரம்பித்துள்ளதாம்.

தொழில்நுட்ப நிறுவனங்கள் என்பதால் வருங்கால உலகை கட்டுக்குள் வைக்கப்போவது ஏஐ தான் என்பதை உணர்ந்து இந்த முடிவை அந்நிறுவனங்கள் எடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது.

இதனால் வரும் நாட்களில் ஊழியர்களின் பணிநீக்கம் மேலும் அதிகரிக்க வாய்ப்புகள் இருக்கின்றன. இதனால் ஊழியர்கள் ஒருவித அச்சத்துடனேயே வேலை செய்யும் நிலைக்கு தள்ளப்பட்டு இருக்கின்றனர்.

உலகின் முன்னணி நிறுவனங்கள், ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் ஆகியவை ஜனவரியின் இந்த முதல் 19 நாட்களில் மட்டும் 7785 ஊழியர்களை பணிநீக்கம் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மஞ்சுளா

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

கனிமொழி தலைமையில் மக்களவை தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழு!

திடீரென்று உயர்ந்த தங்கம் விலை: இன்றைய நிலவரம்!

main reason for job cuts

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *