ஒரே பெண்ணின் புகைப்படத்தை வைத்து இந்தியாவின் அனைத்து மாநில கலாச்சாரத்தையும் பிரதிபலிக்கும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் (artificial intelligence) அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
கடந்த சில ஆண்டுகளாக செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மிகவும் மேம்படுத்தப்பட்ட ஒன்றாக மாறியுள்ளது. இந்த தொழில்நுட்பத்தில் அனைத்து வகையான படங்களையும் உருவாக்க முடியும்.
டெல்லியைச் சேர்ந்த மாதவ் கோஹ்லி என்ற கலைஞர் சமீபத்தில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தைக் கொண்டு உருவாக்கப்பட்ட புகைப்படங்களை தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில் இந்திய மாநிலங்களைச் சேர்ந்த பெண்கள் ஒவ்வொரு மாநிலத்திற்கும் ஏற்ப அவர்களின் முக அமைப்பு எப்படி இருக்கும் என்பதை சித்தரிப்பதாக உள்ளது.
அதில், டெல்லி, மும்பை, அசாம், கோவா, தமிழ்நாடு, உத்தரப்பிரதேசம், மகாராஷ்டிரா, காஷ்மீர் உள்ளிட்ட 31 மாநிலங்களைச் சேர்ந்த பெண்கள் முக அமைப்பானது கலைஞர் மாதவ் கோஹ்லியின் கற்பனை திறனில் வியக்க வைப்பதாக உள்ளது.
இதுகுறித்து மாதவ் கோஹ்லி தனது ட்விட்டர் பக்கத்தில், “இந்தியாவின் ஒவ்வொரு மாநிலத்திலும் உள்ள பெண்களின் தனித்துவமான கலாச்சாரத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் விதமாக செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி புகைப்படங்களை உருவாக்கியிருக்கிறேன்.” என்று தெரிவித்துள்ளார்.
இந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.
செல்வம்
நடிகை கொலை: பணத்திற்காக கணவரே கொன்று நாடகமா?
திமுகவில் ஆ.ராசாவுக்கு கூடுதல் பொறுப்பு!