விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டத்தை முன்னிட்டு ஜார்கண்ட் மாநிலத்தில் ஆதார் அட்டை வடிவில் விநாயகர் கட்டவுட்டுடன் பந்தல் அமைத்து மக்கள் வழிபாடு செய்துள்ளனர்.
ஒவ்வொரு ஆண்டும் விநாயகர் சதுர்த்தி நாடு முழுவதும் ஆவணி மாதம் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. கொரோனா பரவல் காரணமாகக் கடந்த இரண்டு ஆண்டுகளாகப் பெரிதளவு கொண்டாட்டங்கள் இல்லாத நிலையில் இந்த ஆண்டு பிரம்மாண்ட ஏற்பாடுகளுடன் நேற்று (ஆகஸ்ட் 31) விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்பட்டது.
விநாயகர் சதுர்த்தியில் வீடுகள், கோவில்கள், ஆகிய இடங்களில் விநாயகர் சிலைகள் வைத்து வழிபடுவது வழக்கம்.

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு இந்த ஆண்டு பல வித்தியாசமான மற்றும் மக்களைக் கவரும் வகையில் விநாயகர் சிலைகள் தயாரிக்கப்பட்டு விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தன.
அதிலும் குறிப்பாக, திரைப்படத்தில் வரும் கதாபாத்திரங்கள் போலவே விநாயகர் சிலைகள் தயாரிக்கப்பட்டிருந்தன.
ஆனால் இவையனைத்தையும் விட முற்றிலும் வித்தியாசமாக ஜார்கண்ட் மாநிலம் ஜாம்ஷெட்பூர் மாவட்டத்தில் விநாயகருக்கு ஆதார் அட்டை வடிவில் கட்டவுட் செய்து பந்தல் அமைத்து மக்கள் வழிபட்டுள்ளனர்.
விநாயகருக்கான அந்த ஆதார் அட்டையில், தந்தை பெயர், முகவரி, பிறந்த தேதி, பின்கோடு ஆகியவை இடம்பெற்றுள்ளன.
மேலும் விநாயகருக்கே ஆதார் அட்டையா என்று, இந்த புது முயற்சியை மக்கள் ஆச்சரியமாக பார்த்து செல்கின்றனர்.
மோனிஷா
அசத்தும் கேஜிஎப், ஆர்ஆர்ஆர், புஷ்பா விநாயகர் சிலைகள் – புகைப்பட தொகுப்பு!