கேன்ஸ் விழாவில் அனுஷ்கா ஷர்மா: கோலி ரியாக்‌ஷன்!

Published On:

| By Monisha

anushka sharma canees images

நடிகை அனுஷ்கா முதல்முறையாக கேன்ஸ் விழாவில் கலந்து கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

பிரான்ஸில் மே 16 ஆம் தேதி தொடங்கிய 76வது கேன்ஸ் திரைப்பட விழா இன்றுடன் (மே 27) நிறைவடைய உள்ளது. உலகப் புகழ் பெற்ற இந்த திரைப்பட விழாவில் பல மொழி திரைப்படங்கள் திரையிடப்படுகின்றன.

கேன்ஸ் திரைப்பட விழாவில் உலகெங்கிலும் உள்ள ஏராளமான பிரபலங்களுக்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்படும்.

இந்தியாவில் இருந்து இந்த ஆண்டு கேன்ஸ் சிவப்பு கம்பள வரவேற்பில், ஐஸ்வர்யா ராய், மிருணாள் தாக்கூர், சாரா அலிகான், இஷா குப்தா, அதிதி ராவ், சன்னி லியோன், இயக்குநர் அட்லி – பிரியா தம்பதியினர் ஆகியோர் பங்கேற்றனர்.

தொடர்ந்து நடிகை அனுஷ்கா ஷர்மா நேற்று (மே 26) கேன்ஸ் திரைப்பட விழாவில் புகழ்பெற்ற அழகுசாதனப் பொருட்களின் பிராண்டான லோரியல் பாரிஸைப் பிரதிநிதித்துவப்படுத்திச் சிவப்பு கம்பள வரவேற்பில் கலந்து கொண்டார்.

அப்போது வெள்ளை நிற ஜொலிக்கின்ற ஆஃப் ஷோல்டர் உடையில் எளிமையான அணிகலன்கள் மற்றும் ஒப்பனையுடன் வந்திருந்தார்.

அனுஷ்கா ஷர்மாவுடன் சக லோரியல் பாரிஸ் தூதர்களான ஈவா லாங்கோர்யா மற்றும் ஆண்டி மெக்டோவல் ஆகியோரும் சிவப்பு கம்பளத்தில் நடந்து சென்றனர்.

கேன்ஸ் விழாவில் அனுஷ்கா ஷர்மாவின் எளிமையான தோற்றம் அவரது ரசிகர்களை கவர்ந்துள்ளது.

சிவப்பு கம்பளத்தில் நடந்து சென்ற போது எடுத்துக் கொண்ட புகைப்படங்களை அனுஷ்கா அவரது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டார்.

அந்த புகைப்படங்களுக்குப் பலரும் லைக் அளித்து வருகிறனர். அனுஷ்காவின் கணவர் விராட் கோலி அவரது புகைப்படத்திற்கு இதய எமோஜிகளை பதிவிட்டுள்ளார்.

anushka sharma canees images goes viral in social media

இதனையடுத்து அனுஷ்காவின் புகைப்படங்களும் கோலியின் இதய எமோஜிகளும் இணையத்தில் பரவ தொடங்கி ட்விட்டரில் #AnushkaSharma என்ற ஹேஷ்டேக் டிரண்டிங்கில் உள்ளது.

anushka sharma canees images goes viral in social media
anushka sharma canees images goes viral in social media
anushka sharma canees images goes viral in social media

மோனிஷா

அதிரடி சதங்கள்.. அடுக்கடுக்கான சாதனைகள்… யார் இந்த ’சூப்பர் மேன்’ சுப்மன் கில்?

தங்கம் விலை குறைந்தது: இன்றைய நிலவரம்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel