அமலா பாலுக்கு டும்… டும்…டும்… : வைரலாகும் புகைப்படங்கள்!

சினிமா டிரெண்டிங்

நடிகை அமலா பாலும், அவரது காதலர் ஜகத் தேசாயும் இன்று திருமணம் செய்து கொண்டனர்.

தமிழ் உள்ளிட்ட தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை அமலா பால். இவர் தனது நண்பரான ஜகத் தேசாயை காதலித்து வந்தார்.

இதை உறுதிப்படுத்தும் வகையில், அமலா பால் பிறந்தநாளான கடந்த அக்டோபர் 26ஆம் தேதி ஒரு வீடியோ ஒன்றை வெளியிட்டார்.

Image

அந்த வீடியோவில் ஜகத் தேசாய் அமலா பாலுக்கு ப்ரொப்போஸ் செய்து தனது அன்பையும் காதலையும் வெளிப்படுத்தியிருந்தார்.

இதைத்தொடர்ந்து அவரது ரசிகர்கள் திருமணத்துக்கு வாழ்த்து கூறி வந்த நிலையில், நெருங்கிய நண்பர்கள், உறவினர்கள் சூழ இருவருக்கும் இன்று (நவம்பர் 5) திருமணம் நடந்தது.

Image

கேரள மாநிலம் கொச்சியில் உள்ள கிராண்ட் ஹயாத் போல்ஹாட்டி ஹோட்டலில் திருமணம் நடந்தது. இதுகுறித்த புகைப்படங்களை இருவரும் தங்களது இன்ஸ்டா பக்கத்தில் ஷேர் செய்துள்ளனர்.

அதில் அமலா பால், “எங்களை ஒன்றிணைத்த அன்பையும் அருளையும் கொண்டாடுகிறோம்” என்று பதிவிட்டுள்ள நிலையில் ஜகத் தேசாய், “இந்த வாழ்நாள் முழுவதும் என் தெய்வீகப் பெண்ணுடன் கைகோர்த்து நடப்பேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

Image

இவர்களது திருமண புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், ரசிகர்கள் வாழ்த்துக் கூறி வருகின்றனர்.

முன்னதாக நடிகை அமலா பாலுக்கும் இயக்குநர் ஏ.எல்.விஜய்க்கும் கடந்த 2014ஆம் ஆண்டு திருமணம் நடந்தது. 2016ல் இருவரும் விவாகரத்து கேட்டு நீதிமன்றத்தை நாடி, 2017ல் விவாகரத்து பெற்றனர்.

இதையடுத்து ஏ.எல்.விஜய் ஐஸ்வர்யா என்பவரைத் திருமணம் செய்துகொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

பிரியா

காங்கிரஸ் போன்று பாஜக ஊழல் கட்சியல்ல : மோடி

கோலியின் 49வது சதம்: சச்சின் என்ன சொன்னார் தெரியுமா?

+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *