actress aishwarya rai at cannes

கேன்ஸ் விழா: கவனம் ஈர்த்த ஐஸ்வர்யா ராய்

டிரெண்டிங்

கேன்ஸ் திரைப்பட விழாவில் நடிகை ஐஸ்வர்யா ராய் அணிந்து வந்த உடை வழக்கம் போல ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்று இணையத்தை ஆக்கிரமிக்கத் தொடங்கியுள்ளது.

76வது கேன்ஸ் திரைப்பட விழா பிரான்ஸில் மே 16 ஆம் தேதி தொடங்கியது. உலகப் புகழ் பெற்ற இந்த திரைப்பட விழாவில் பல மொழி திரைப்படங்கள் திரையிடப்படுகின்றன.

கேன்ஸ் திரைப்பட விழாவில் உலகெங்கிலும் உள்ள ஏராளமான பிரபலங்களுக்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்படும்.

இந்தியாவில் இருந்து ஐஸ்வர்யா ராய், மிருணாள் தாக்கூர், சாரா அலிகான், இஷா குப்தா, அதிதி ராவ், சன்னி லியோன், அனுஷ்கா ஷர்மா உள்ளிட்ட பிரபலங்கள் கேன்ஸ் திரைப்பட விழாவின் சிவப்பு கம்பள வரவேற்பில் கலந்து கொள்கின்றனர்.

கேன்ஸ் திரைப்பட விழாவில் கலந்து கொள்வதற்காக நடிகை ஐஸ்வர்யா ராய் அவரது மகள் ஆராத்யாவுடன் மே 17 ஆம் தேதி அதிகாலை மும்பை விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டார்.

இதனையடுத்து நேற்று (மே 18) இரவு ‘Indiana Jones And The Dial Of Destiny’ என்ற அமெரிக்க படம் திரையீட்டில் கலந்து கொண்டார்.

அப்போது சிவப்பு கம்பள வரவேற்பில் நடந்து வந்த ஐஸ்வர்யா ராயின் தோற்றத்தைக் கண்டு அங்கு கூடியிருந்த மற்ற நாட்டுப் பிரபலங்களே வியப்படைந்தனர்.

actress aishwarya rai at cannes

கருப்பு மற்றும் சில்வர் நிறம் கலந்த ஒரு பெரிய உடையை அணிந்திருந்தார் ஐஸ்வர்யா ராய்.

யானையின் பெரிய காதுகள் போன்ற கருப்பு பெல்ட் மற்றும் வெள்ளி நிறத்தில் தலை முதல் கால் வரை முழு உடலையும் மறைக்கிற அளவிலான உடையை அவர் அணிந்திருந்தார்.

இப்படி மின்னும் உடையில் ரெட் கார்ப்பெட்டில் ரேம்ப் வாக் வந்த புகைப்படம் இணையத்தை ஆக்கிரமித்துள்ளது.

actress aishwarya rai at cannes

இந்தியாவில் பிரபல நடிகையாக திகழும் ஐஸ்வர்யா ராய் தொடர்ந்து கடந்த 2002 ஆண்டு முதல் 21வது முறையாக கேன்ஸ் திரைப்பட விழா சிவப்பு கம்பள வரவேற்பில் கலந்து கொள்கிறார்.

actress aishwarya rai at cannes

ஒவ்வொரு ஆண்டும் அவர் அணிந்து வரும் உடை உலகளவில் கவனம் பெறும். அந்த வகையில் இந்த ஆண்டும் ஐஸ்வர்யா ராய் அணிந்து வந்த உடை டிரெண்டிங்கில் உள்ளது.

actress aishwarya rai at cannes

மோனிஷா

கோலியின் ருத்ரதாண்டவம் : வாழ்வா சாவா ஆட்டத்தில் பெங்களூரு அபார வெற்றி!

பத்தாம் வகுப்பு ரிசல்ட்: எப்படி பார்ப்பது?

+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *