நடிகை அதிதி ராவ் ஹைதாரி, நடிகர் சித்தார்த் திருமணம் இன்று (செப்டம்பர் 16) நடைபெற்றது.
நடிகை அதிதி ராவிற்கு தற்போது 37 வயதாகிறது. சித்தார்த்துக்கு 45 வயதாகிறது. அதிதிக்கு ஏற்கனவே 2009ஆம் ஆண்டு சத்யதீப் மிஸ்ராவுடன் திருமணம் நடைபெற்றது. இவர்கள் கடந்த 2013ஆம் ஆண்டு கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்துவிட்டனர்.
அதுபோன்று சித்தார்த்துக்கும் ஏற்கனவே மேக்னா நாராயணுடன் திருமணம் நடைபெற்றது. இருவரும் 2007ஆம் ஆண்டு பிரிந்துவிட்டனர்.
விவகாரத்துக்கு பிறகு அதிதி, சித்தார்த் சினிமாவில் பிஸியான நிலையில், இருவரும் காதலிப்பதாக செய்திகள் வெளியானது.
இதனை உறுதிப்படுத்தும் விதமாக இருவரும் இணைந்து பொது இடங்களில் தலைகாட்டத் தொடங்கினர். இருவரும் தங்களுக்கு நிச்சயம் நடைபெற்றதாக கடந்த மார்ச் 28 அன்று இன்ஸ்டாகிராமில் பதிவிட்டிருந்தனர்.
இந்நிலையில், இன்று தெலங்கானா மாநிலத்தில் உள்ள 400 ஆண்டுகள் பழமையான ஸ்ரீ ரங்கநாயக சுவாமி கோயிலில் நண்பர்கள், குடும்பத்தினர் மத்தியில் இருவரும் திருமணம் செய்துகொண்டனர்.
இந்த புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார் அதிதி.
அதில், “நீ என் சூரியன், நீ என் சந்திரன், நீ என் நட்சத்திரம்.. முடிவில்லா காதல், ஒளி, மேஜிக். மிஸ்டர், மிஸஸ் அது-சித்து” என குறிப்பிடப்பட்டது.
இந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. #AditiRaoHydari ஹேஷ்டேக் ட்ரெண்டிங்கில் உள்ளது.
திருமண புகைப்பட க்ளிக்ஸ்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
பிரியா
கருடன் பட இயக்குநர்… லெஜெண்ட் சரவணன் போடும் திட்டம்!
“தெறிக்க விட்டான் வந்தல்லே” – ‘வேட்டையன்’ ஆடியோ லாஞ்ச் எப்போது?