குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து மணிமேகலை விலகியுள்ளார். நிகழ்ச்சியில் பங்கேற்பாளராக இருக்கும் பிரியங்காவுடன் ஏற்பட்ட மோதல் காரணமாகவே அவர் வெளியேறியதாக சொல்லப்பட்டுள்ளது. இந்த நிலையில், பிரபல நடிகர் ஆர்.ஜே.ஷா யூடியூப்பில் ஒரு வீடியோ பதிவிட்டுள்ளார். அதில் கூறப்பட்டுள்ள தகவல்களை பார்ப்போம்.
மணி மேகலை நிகழ்ச்சியின் தொகுப்பாளர் என்பதால் அனைவரிடத்திலும் நன்றாக பேசி பழக வேண்டுமென்று விஜய் டி.வி. கேட்டுக் கொண்டுள்ளது. ஆனால், அதற்கு மறுத்த மணிமேகலை பிரியங்காவிடத்தில் மட்டும் பேசமாட்டேன் என்று பிடிவாதம் பிடித்துள்ளார். இதையடுத்து, விஜய் டி.வி. நிர்வாகமே, அவரை வெளியேற்றியுள்ளது. தானாக அவர் வெளியேறவில்லை.
வெளியே வந்த மணிமேகலை அது குறித்து வீடியோ வெளியிட்டது விஜய் டி.வி நிர்வாகத்துக்கு பிடிக்கவில்லை. குடும்பத்துக்குள் நடப்பதை வெளியே சொன்னது போல கருதுகிறது. இது , விஜய் டி.வியை டேமேஜ் செய்யும் விதத்தில் இருக்கிறது. குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பங்கேற்றதால்தான் மணிமேகலைக்கு யூடியூப்பில் 2 மில்லியன் சப்ஸ்கிரைபர்கள் கூடியது.
கடந்த முறை தொகுப்பாளர் பதவி கிடைக்கவில்லை என்பதால் வெளியே சென்றார். இப்போது, தொகுப்பாளர் பணி கிடைத்தும் செட் ஆகவில்லை அவசரத்தில் கோபத்தில் இந்த முடிவை எடுத்து விட்டார். விஜய் டி.வி தான் புரபஷனலாக நடந்து கொண்டுள்ளது. மணி மேகலை புரபஷனலாக இல்லை. அடுத்த சீசனில் பிரியங்கா இருக்க மாட்டார். மணிமேகலை தன் தலையில் தானே மண்ணை அள்ளிப் போட்டுக் கொண்டார் என்று தெரிவித்திருந்தார். இதற்கிடையே, அந்த வீடியோவை திடீரென்று ஆர்.ஜே. ஷா நீக்கி விட்டார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
–எம்.குமரேசன்
”நடக்காத விஷயங்களை பரப்பாதீங்க” : குமுறும் குக் வித் கோமாளி மணிமேகலை
பக்கிங்ஹாம் மர்டர்ஸ் : விமர்சனம்!