துணிவு திரைப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பில் கலந்து கொள்வதற்காக நடிகர் அஜித் குமார், சென்னையிலிருந்து விமானம் மூலம் தாய்லாந்திற்கு இன்று (செப்டம்பர் 24) சென்றுள்ளார்.
நடிகர் அஜித், இயக்குனர் ஹெச்.வினோத் கூட்டணியில் நேர்கொண்ட பார்வை, வலிமை திரைப்படங்கள் உருவாகி வெற்றி பெற்றது. இதனைத் தொடர்ந்து இந்த கூட்டணியின் மூன்றாவது படமாக ஏகே 61 தயாராகி வந்தது. போனி கபூர் தயாரிக்கும் இப்படத்தில் மஞ்சு வாரியர் நடித்துள்ளார். செப்டம்பர் 21-ஆம் தேதி இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது.
படத்திற்கு துணிவு என்று பெயரிடப்பட்டுள்ளது. செப்டம்பர் 22-ஆம் தேதி துணிவு திரைப்படத்தின் செகண்ட் லுக் வெளியானது. துணிவு படத்தின் டைட்டில் வெளியானதும், அஜித் ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர். தொடர்ச்சியாக இரண்டு நாட்கள் ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் துணிவு திரைப்படம் ட்ரெண்டிங்கில் இருந்தது.
1987-ஆம் ஆண்டு பஞ்சாப் மாநிலத்தில் நடைபெற்ற வங்கி கொள்ளையை மையமாக வைத்து, இப்படத்தின் கதைக்களம் அமைக்கப்பட்டுள்ளது. படத்தின் போஸ்டரில் ரூபாய் நோட்டுகள் உள்ள குறியீடுகள் இருந்தது. இப்படத்தின் படப்பிடிப்புகள் சென்னை, ஐதராபாத், விசாகப்பட்டிணத்தில் நடைபெற்றன. இந்தநிலையில், இறுதிக்கட்ட படப்பிடிப்பு பணிகள், தாய்லாந்து நாட்டில் உள்ள பேங்காங்க் பகுதியில் நடைபெற உள்ளது.
இறுதிக்கட்ட படப்பிடிப்பில் கலந்து கொள்வதற்காக, சென்னையிலிருந்து விமானம் மூலம் தாய்லாந்திற்கு நடிகர் அஜித் குமார் இன்று சென்றுள்ளார். நடிகர் அஜித் குமார் சென்னை விமான நிலையத்திலிருந்து தாய்லாந்து செல்லும் புகைப்படங்கள், சமூக வலைதளங்களில் வெளியாகி உள்ளது. தனது ரசிகர் ஒருவருடன் துணிவு திரைப்பட தோற்றத்துடன், கோட் சூட் அணிந்து அஜித் குமார் புகைப்படம் எடுத்துள்ளார். இந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
செல்வம்
‘வாரிசு’ சாதனையை முறியடித்த ’துணிவு’!
ஆவுடையப்பன் vs அப்பாவு : அறிவாலயத்தில் நேரு நடத்திய பஞ்சாயத்து- முழு விவரம்!