நடிகர் அஜித் குமார் பைக் பயணத்தின் போது ரசிகர் ஒருவரிடம் ஜாலியாக உரையாடிய வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் அதிகளவில் பகிரப்பட்டு வருகிறது.
நடிகர் அஜித், நேர்கொண்ட பார்வை, வலிமை திரைப்படங்களைத் தொடர்ந்து மூன்றாவது முறையாக இயக்குனர் ஹெச்.வினோத்துடன் கூட்டணி சேர்ந்துள்ளார்.
இதுவரை பெயரிடப்படாத இந்த படத்தின் படப்பிடிப்புகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. முதற்கட்ட படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடைபெற்றது.
பின்னர் ஐரோப்பாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட நடிகர் அஜித், விசாகப்பட்டிணத்தில் நடைபெற்ற இரண்டாம் கட்ட படப்பிடிப்பில் கலந்து கொணடார்.
தற்போது நடிகர் அஜித்குமார் தனக்கு பிடித்தமான பைக் பயணத்தை மேற்கொண்டு வருகிறார்.
கார்கில், ஸ்ரீநகர், சண்டிகர் உள்ளிட்ட பகுதிகளில் தனது பயணத்தை மேற்கொண்டு வருகிறார். நடிகர் அஜித் குமார் மேற்கொள்ளும் பயண வரைபடத்தை அவருடைய மேலாளர் சுகேஷ் சந்திரா தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
தமிழ்நாட்டிலிருந்து தனது பயணத்தை துவங்கும் அஜித்குமார், ஜம்மு காஷ்மீர் வரை பயணிக்கிறார்.
இந்த பயணங்களின் போது, அஜித்தின் புகைப்படம் மற்றும் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகும்.
அந்தவகையில், நடிகர் அஜித் குமார் பயணம் செய்தபோது, ரசிகர் ஒருவர் அவரிடம் “சார் நான் கோயம்புத்தூரிலிருந்து வருகிறேன். மூன்று நாட்களாக உங்களைத் தேடிக்கொண்டிருக்கிறேன்” என்று சொன்னவுடன்,
“மூன்று நாட்களாக என்னைத் தேடிக்கொண்டிருக்கிறீர்களா? நான் என்ன கொலைகாரனா? கொள்ளைக்காரனா?” என்று அஜித் நகைச்சுவையாக பதிலளித்துள்ளார்.
அஜித் குமாரின் இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
செல்வம்
அருண் விஜயை மீண்டும் நடிக்க வைத்த விஜய
கிச்சன் கீர்த்தனா – தினை – தேங்காய்ப்பால் புலாவ்