கடலுக்கு அடியில் அஜித்துக்கு பேனர்!

டிரெண்டிங்

நடிகர் அஜித்தின் 30 ஆண்டுகள் திரையுலக பயணத்தைக் கொண்டாடும் வகையில், புதுச்சேரியில் அவரது ரசிகர்கள், கடலுக்குள் 100 அடியில் பிரம்மாண்ட பேனர் வைத்து அசத்தியுள்ளனர்.சமூக வலைதளங்களில், குறிப்பாக ட்விட்டரில் #30YearsofAJITHISM என்ற ஹேஷ்டேக் ட்ரெண்டாகி வருகிறது.

நடிகர் அஜித் திரையுலகில் நடிக்க வந்து 30 ஆண்டுகள் ஆகிறது. இதனை அவரது ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். அன்னதானம், விளையாட்டு போட்டிகள் நடத்துவது, ஏழை எளிய மக்களுக்கு உதவுதல் போன்ற செயல்களை செய்து வருகின்றனர். அதனை தங்களது சமூக வலைதளப் பக்கங்களில் பகிர்ந்து வருகின்றனர்.

அந்தவகையில், புதுச்சேரியைச் சேர்ந்த ஃப்ரென்ச் சிட்டி அஜித் ரசிகர்கள் சார்பில், கடலுக்குள் 100 அடியில் நடிகர் அஜித் பேனர் வைக்கப்பட்டுள்ளது. இதனை, அவர்கள் தங்கள் ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளனர். இந்த வீடியோவில், இரண்டு நீச்சல் வீரர்கள் நடிகர் அஜித் புகைப்படம் தாங்கிய பேனரை கையில் பிடித்துள்ளனர். அந்த பேனரில்  30YearsofAJITHISM என்ற வாசகம் இடம் பெற்றுள்ளது. இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகி வருகிறது.

செல்வம்

மீண்டும் சினிமாவில் காஜல்: இந்தியன் 2ல் தொடர்கிறாரா?

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published.