Acne Treatment Tips for Teens minnambalam beauty tips

பியூட்டி டிப்ஸ்: பருவ வயதில் பருத்தொல்லை… தடுப்பது எப்படி?

டிரெண்டிங்

கவலைகள் இல்லாமல் பட்டாம்பூச்சிகளாகச் சிறகடிக்கும் பருவ வயதில், பலருக்கும் பெரும் பிரச்சினையாக வருவது முகப்பரு. அழகின் முக்கியத்துவம் பிரதானமாக இருக்கும் இந்தப் பருவத்தில் பருக்கள் வருவது கவலையைத் தரும் விதமாக அமையும். பருக்களின் பார்வையில், ஆண் பெண் பேதம் இல்லை; இருபாலருக்கும் வரலாம். பொதுவாக 11 வயது முதல் 30 வயது வரை பருக்களின் தாக்கம் இருக்கும்.

பெரும்பாலும் மரபு வழி, ஹார்மோன் சமநிலையின்மை (Hormonal imbalance), எண்ணெய்ப் பசை அதிகம் உள்ள சருமம், தோல் மற்றும் முடி- பராமரிப்புப் பொருள்களால் ஏற்படும் ஒவ்வாமை, சில மருந்துகளால் ஏற்படும் ஒவ்வாமை, பொடுகுத் தொல்லை, மன அழுத்தம் போன்றவற்றால் பருக்கள் வருகின்றன.

தடுப்பது எப்படி? Acne Treatment Tips for Teens

முகத்தை எண்ணெய் வழியாமல் சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும்.

ஒரு நாளைக்கு 2,3 முறை வெதுவெதுப்பான நீரில் முகத்தைக் கழுவ வேண்டும். (மிகவும் சூடான அல்லது குளிர்ந்த நீர் வேண்டாம்; அது பிரச்னையை அதிகமாக்கும்).

முகம் கழுவ- சோப் (Soap) பயன்படுத்த வேண்டாம்.

நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும்.

காய்கறிகள், பழங்கள், கீரைகள்- இவற்றை அதிகம் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

மலச்சிக்கல் இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

எண்ணெய், பால் பொருள்களைத் தவிர்க்க வேண்டும்.

கொழுப்பு நிறைந்த உணவுகளைத் தவிர்க்க வேண்டும்.

எளிதில் ஜீரணிக்கக் கூடிய உணவுகளை உட்கொள்ளும் பழக்கம் அவசியம்.

முகத்துக்கான க்ரீம், அழகு சாதனப் பொருள்களைத் தவிர்க்க வேண்டும்.

தூங்கும் முன் முகத்தை நன்கு கழுவ வேண்டும்.

தலைமுடியைச் சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும்.

ஆவி பிடித்தலைப் பின்பற்றலாம்.

யோகாசனப் பயிற்சிகள் செய்யலாம்.

ஆவி பிடித்தலும் யோகாசனங்களும் வியர்வை மூலம் முகத்தில் உள்ள அழுக்குகள் நீங்கி முகம் சுத்தமாக உதவும். அதன் மூலம் பருக்கள் மறையும்.

முக்கியமாக, பருவைக் கிள்ளக்கூடாது. கிள்ளுவதால் வரும் காயத்தினால், பாக்டீரியா தொற்று, தழும்புகள், கரும்புள்ளிகள் வர வாய்ப்புகள் அதிகம்.

முக ஈரத்தை நன்கு ஒற்றி எடுத்தல் வேண்டும். அழுந்தத்துடைப்பதனாலும் காயங்கள் ஏற்படலாம். பருக்கள் பரவல் அதிகரிக்கலாம்.
தலையில் பொடுகு இருந்தால், பொடுகை முதலில் நீக்க வேண்டும். பொடுகால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தலைக்கு வைக்கும் தலையணை மூலம்கூட பருக்கள் வரலாம். மற்றவர்களுக்கும் பரவலாம். தலையணையின் மேல் ஒரு துண்டினை விரித்து, தினமும் அதை சுத்தம் செய்து, அதன்பின் பயன்படுத்துவதால் பரு வராமல், பரவாமல் தடுக்கலாம்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

டிஜிட்டல் திண்ணை: வெளிநாட்டில் ஸ்டாலின்… தேர்தல் நெருங்கும் நேரம்…திமுக எம்.எல்.ஏ. நீக்கம்? 

குடிசையில் ஏழைகள் : ஆளுநர் குற்றஞ்சாட்டு… புள்ளிவிவரத்துடன் அமைச்சர் பதில்!

பிப்ரவரி சபதம் : அப்டேட் குமாரு

தீவிர அரசியலில் விஜய் : திணறும் ’GOAT’ படத் தயாரிப்பாளர்!

Acne Treatment Tips for Teens

+1
2
+1
0
+1
0
+1
4
+1
0
+1
1
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *