செஸ் ஒலிம்பியாட்: வீடுகளுக்கு சென்று வரவேற்கும் ‘தம்பி’!

டிரெண்டிங்

தமிழகத்தில் செஸ் ஒலிம்பியாட் போட்டி நாளை மறு தினம் நடக்க இருக்கிறது. தமிழகத்தில் முதன்முறையாக நடக்கும் போட்டி என்பதால் உலக நாடுகள் கவனம் தமிழகம் பக்கம் திரும்பியிருக்கிறது.
தமிழகமே விழாக் கோலம் பூண்டுள்ளது எனலாம். எங்குப் பார்த்தாலும் செஸ் ஒலிம்பியாட்டின் சின்னமான ‘தம்பி’ தான் இருக்கிறார். தம்பி சின்னம் செஸ் ஒலிம்பியாட்டை வரவேற்கும் விதமாகத் தமிழகத்தின் அனைத்து இடங்களிலும் புகைப்படமாகவோ, கட் அவுட்டாகவோ, சென்னையில் சில இடங்களில் சிலையாகவோ வைக்கப்பட்டு வருகிறது. அப்படி வைக்கப்படும் தம்பி சின்னத்துடன் இளைஞர்கள் பொது மக்கள், கல்லூரி மாணவர்கள், சுட்டீஸ் என பலரும் ஆர்வமாக செல்ஃபி எடுத்துச் செல்கின்றனர்.


அதன்படி தமிழகத்தில் ‘தம்பி’தான் ட்ரெண்டிங்கில் இருக்கிறார். இந்நிலையில் இன்று (ஜூலை 26) அனைத்து வீட்டுச் சமையலறையிலும் நுழைந்துள்ளார் ‘தம்பி’.
செஸ் போட்டியை விளம்பரப்படுத்தும் விதமாக செஸ் போர்டு மற்றும் தம்பி சின்னத்தை அச்சிட்டு ஆவின் நிறுவனம் விநியோகித்துள்ளது. செஸ் விளையாட்டு நடைபெறும் தகவல் வீட்டுக்கு வீடு சென்று சேரும் வகையில் ஆவின் நிறுவனம் இவ்வாறு செய்துள்ளது. ஆவின் பாக்கெட்டில் இடம்பெற்றுள்ள இந்த விளம்பரம் பொதுமக்களிடையே வரவேற்பைப் பெற்றுள்ளது.

பால் பாக்கெட்டை வாங்கும் மக்கள் ஒரு நிமிடம் அந்த விளம்பர படத்தையும் தம்பி படத்தையும் பார்த்துவிட்டுதான் கடையிலிருந்து நகர்கின்றனர்.
பிரியா

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *