ஆதிபுருஷ் படத்தின் இயக்குநர் ஓம் ராவுத் சில நாட்களுக்கு முன்னர் ஓர் அறிவிப்பை வெளியிட்டிருந்தார். அதில், “ஆதிபுருஷ் படத்தின் ஒவ்வொரு காட்சியின்போதும் அனுமனுக்காக ஒரு இருக்கையை காலியாக ஒதுக்க ஏற்பாடு செய்ய வேண்டும்” என்று கேட்டுக்கொண்டார்.
இந்நிலையில், திரையரங்குகளில் அனுமானுக்காக இருக்கைகள் ஒதுக்கப்பட்டுள்ளது தொடர்பான புகைப்படங்கள் மற்றும் அந்த படம் வெளியான திரையரங்கம் ஒன்றிற்கு குரங்கு வந்து பார்வையிட்டது தொடர்பான வீடியோ காட்சி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
ராமாயண கதையை மையமாக வைத்து ஆதிபுருஷ் திரைப்படம் மிக பிரமாண்டமாக உருவாக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் ராமராக பிரபாஸ், ராவணனாக சைப் அலி கான், சீதையாக கீர்த்தி சனோன் ஆகியோர் நடித்துள்ளனர்.
ஓம் ரவுத், பூஷன் குமார், பிரசாத் சுதார், கிரிஷன் குமார் ஆகியோரின் கூட்டுத் தயாரிப்பில் இந்த படத்தை ஓம் ரவுத் இயக்கியுள்ளார். பான் இந்தியா படமான ஆதிபுருஷ் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் 2 டி மற்றும் 3 டி தொழில்நுட்பங்களில் இன்று(ஜூன் 16) வெளியாகியுள்ளது.
இந்நிலையில், ஆதிபுருஷ் திரைப்படத்தின் இயக்குநர் ஓம் ராவுத் கேட்டுக்கொண்டதன் பெயரில் இந்த திரைப்படம் வெளியான திரையரங்குகளின் முதல் இருக்கை அனுமானுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது.
இதனிடையே ஆதிபுருஷ் திரைப்படம் திரையரங்கில் இன்று திரையிடப்பட்டுக் கொண்டிருக்கும் போது அங்கு குரங்கு ஒன்று வந்து பார்வையிட்டது தொடர்பான வீடியோ காட்சி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
குரங்கு திரையரங்கிற்கு வந்த சமயத்தில் படம் பார்த்து கொண்டிருந்த ரசிகர்கள் ’ஜெய் ஸ்ரீ ராம்’ என்று முழக்கமிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மு.வா.ஜெகதீஸ் குமார்
பெண் எஸ்.பி.க்கு பாலியல் தொல்லை: ராஜேஷ் தாஸ் வழக்கில் இன்று தீர்ப்பு!
கரகாட்டக்காரன் – திரையரங்குகளை நிறைத்த திருவிழா!