மச்சம் என்பது சிலருக்கு அழகைத் தருவதாகவும் சிலருக்கு அழகற்றதாகவும் அமையும். அப்படி அழகற்றதாக நினைக்கும் மச்சத்தை அகற்ற நினைப்பார்கள். இந்த நிலையில், “மச்சம் என்பது எப்போது வேண்டுமானாலும் வரலாம். திடீரென மச்சம் வந்தால் அதைப் பார்த்து பயப்படத் தேவையில்லை. அதே சமயம், எல்லா மச்சங்களையும் அப்படி அணுக முடியாது” என்கிறார்கள் சரும மருத்துவர்கள்.
“திடீரென தோன்றும் மச்சம் குறித்து எப்போது கவலைப்பட வேண்டும், எச்சரிக்கையாக வேண்டும் என்பதற்கு சில அறிகுறிகள் உள்ளன. உதாரணத்துக்கு, ஒரு மச்சம் திடீரென அளவில் பெரிதாகிக் கொண்டே போகிறது என்றாலோ, ஒரே மாதத்தில் அதன் அளவானது வித்தியாசமான அளவில் பெரிதாகிறது என்றாலோ, அந்த மச்சத்திலிருந்து நீர்க்கசிவு போன்ற ஏதேனும் இருந்தாலோ, மச்சம் இருக்கும் இடம் புண்ணாகிப் போனாலோ அது குறித்து கவனிக்க வேண்டியது அவசியம். உடனே மருத்துவரை அணுக வேண்டும்.
சில மச்சங்களில் ஏற்படும் புண்ணானது, ஆறினாலும், மீண்டும் மீண்டும் வரலாம். அந்தப் பகுதியில் குழி போன்று வரலாம். மச்சத்தைச் சுற்றிய பகுதியானது சீராக இல்லாமலிருக்கலாம். இவையெல்லாம் அந்த மச்சமானது புற்றுநோயாக மாறக்கூடும் என்பதற்கான அறிகுறிகள். எனவே, இந்த அறிகுறிகளை அலட்சியம் செய்யாமல் உடனே மருத்துவ ஆலோசனை பெற வேண்டும். மற்றபடி, இந்த அறிகுறிகள் இல்லாமல் திடீரென தோன்றும் மச்சம் குறித்து பயப்பட வேண்டாம். மச்சம் புதிய இடங்களில் வரலாம். அது சாதாரணமானதுதான்” என்று விளக்கமளிக்கிறார்கள்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
ஹெல்த் டிப்ஸ்: எதற்கெடுத்தாலும் மாத்திரையை விழுங்குபவரா நீங்கள்? ஜாக்கிரதை!
டாப் 10 நியூஸ் : அதிமுக ‘கள ஆய்வுக்குழு’ கூட்டம் முதல் டெல்லி கணேஷ் உடல் தகனம் வரை!
கிச்சன் கீர்த்தனா : சைனீஸ் பேல்
மழைக்கால பரிதாபங்கள்… அப்டேட் குமாரு
பாஜகவுடன் மீண்டும் கூட்டணியா? – எடப்பாடி பதில்!
நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்!