மாத்திரை அட்டையா? திருமண அழைப்பிதழா?

டிரெண்டிங்

வாட்ஸ் அப் , இன்ஸ்டாகிராம் , ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் ஒரு புகைப்படம் வைரலாகி வருகிறது.

திருவண்ணாமலையைச் சேர்ந்த தனியார் கல்லூரி பேராசிரியரும், பார்மசிஸ்டுமான எழிலரசனுக்கும், அதே பகுதியைச் சேர்ந்த நர்சிங் படித்துள்ள வசந்த குமாரிக்கும் திருமணம் நடைபெற உள்ளது.

பொதுவாகவே திருமணங்களுக்கு கார்டு டிசைனர்களால் விதவிதமாக அழைப்பிதழ் தயாரிக்கப்பட்டு வருவது வழக்கம்.

அவர்களது கிரியேட்டிவிட்டிக்கு எல்லைகளே கிடையாது. டிரைவிங் லைசென்ஸ், ரேஷன் கார்டு, என மணமக்களின் வேலைக்கு ஏற்ப விதவிதமான வடிவங்களில் வரவேற்பு மற்றும் திருமண அழைப்பிதழ்களை தயாரித்து கொடுக்கின்றனர்.

இந்த லிஸ்டில் செப்டம்பர் 5 ஆம் தேதி திருமணம் செய்து கொள்ள உள்ள திருவண்ணாமலையைச் சேர்ந்த இந்த பார்மசிஸ்ட் ஜோடிகளும் சேர்ந்துள்ளனர்.

அப்படி என்ன வித்தியசமான என்று கேட்கிறீர்களா… ஆம் மணமகன் எழிலரசன் சொந்தமாக மெடிக்கல் நடத்தி வருகிறார்.

எனவே தன்னுடைய திருமண பத்திரிக்கையை மாத்திரை அட்டை வடிவில் அச்சடித்துள்ளார்.

அதில் எச்சரிக்கை என்று அச்சிட்டு, ”என்னுடைய நண்பர்கள் உறவினர்கள் அனைவரும் தவறாமல் வர வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்த பத்திரிக்கை தான் இப்போது சமூக வலைதளங்கள் முழுவதும் வைரலாகி வருகிறது.

மு.வா.ஜெகதீஸ் குமார்

நயன், விக்னேஷ் சிவன் திருமணம்: நெட்பிளிக்ஸ் அப்டேட்!

+1
0
+1
2
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *