பாகிஸ்தானில் இருந்து துபாய் சென்ற விமானத்தில் பயணி ஒருவர் விநோதமாக நடந்து கொண்டதுடன் ரகளையிலும் ஈடுபட்ட காட்சிகள் வைரலாகி வருகின்றன.
பாகிஸ்தானின் பெஷாவர் நகரில் இருந்து PK-283 ரக விமானம் துபாய் நோக்கி சென்று கொண்டிருந்தது. விமானம் நடுவானில் சென்று கொண்டிருந்தபோது, திடீரென பயணி ஒருவர் சக பயணிகளுடன் தகராறில் ஈடுபட்டுள்ளார்.
இதுதொடர்பாக அவரிடம் விமான அதிகாரிகள் கேட்டபோது, அவர் விமானத்தின் இருக்கைகளை கையால் குத்தியதுடன், விமானத்தின் ஜன்னல்களை காலால் எட்டி உதைத்திருக்கிறார்.
இதைத் தொடர்ந்து அவர் பயணிகள் நடந்து செல்லும் பாதையில் தலைக்குப்புற படுத்தும் கிடந்தார். அவரது செய்கைகள் விநோதமாக இருந்தன.
நிலைமையைக் கட்டுப்படுத்தும் முயற்சியில் விமானப் பணிப்பெண்கள் தலையிட்டபோது அவர்களையும் அந்த நபர் தாக்கியிருக்கிறார். இதனால் நடுவானில் சலசலப்பு ஏற்பட்டது.
விமானத்தில் இருந்த மற்ற பயணிகளுக்கு மிகுந்த சிரமம் ஏற்பட்டது. நிலைமை மோசமானதை அடுத்து விமான பாதுகாப்பு தடுப்புச்சட்டப்படி அதிகாரிகள் அந்த நபரை இருக்கையில் கட்டி வைத்தனர்.
அதன்பிறகு விமானத்தின் கேப்டன், துபாய் விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டாளரைத் தொடர்பு கொண்டு பாதுகாப்பு கோரினார்.
துபாய் விமான நிலையத்தில் விமானம் தரையிறங்கியதும், அந்தப் பயணியை பாதுகாப்பு அதிகாரிகள் கைது செய்தனர். இந்த வீடியோ வெளியானதைத் தொடர்ந்து சம்மந்தப்பட்ட அந்த பயணியை பாகிஸ்தான் விமான நிறுவனம் கருப்பு பட்டியலில் வைத்து உள்ளது.
கலை.ரா
சேலை கட்டி கால் பந்து விளையாடிய எம்.பி!