பணத்துக்காக மனைவியை விற்ற கொடூர கணவர்!

டிரெண்டிங்

திருமணம் முடிந்து, மனைவியை டெல்லிக்கு அழைத்து சென்று விற்றுவிட்டு தலைமறைவான கணவர் நேற்று (நவம்பர் 12) கைது செய்யப்பட்டுள்ளார்.

ஒடிசா மாநிலம் கலாஹண்டி மாவட்டத்தில் உள்ள மஸ்ககுடா கிராமத்தைச் சேர்ந்த கிரா பெரூக்(25) என்பவருக்கும், நார்லா கிராமத்தைச் சேர்ந்த பெண் (22) ஒருவருக்கும் கடந்த மாதம் திருமணம் நடைபெற்றது.

இதனை தொடர்ந்து கடந்த அக்டோபர் 30ம் தேதி டெல்லிக்கு வேலை தேடி சென்ற பெரூக், தனது புதுமனைவியையும் உடன் அழைத்து சென்றார்.

கடந்த நவம்பர் 2ஆம் தேதி டெல்லி மெட்ரோ நகரில் உள்ள ஒருவருக்கு தனது மனைவியை பெரும் தொகைக்கு விற்றுவிட்டு தனியாக ஊர் திரும்பினார்.

இதனால் பதறிப்போன பெண்ணின் பெற்றோர், “தங்களது மகள் எங்கே?” என்று கேட்டதற்கு பதில் அளிக்காமல் தப்பி ஓடினார் பெரூக்.

இதற்கிடையே கடந்த 5ம் தேதி டெல்லியில் விற்கப்பட்ட பெண், தொலைபேசியில் தனது தந்தை குலாமணி போயை தொடர்பு கொண்டு தனக்கு நேர்ந்த கொடுமையைக் கூறி அழுதுள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த அவரது தந்தை குலாமணி, உடனடியாக அருகிலுள்ள நார்லா காவல்நிலையில் தனது மகளை டெல்லிக்கு அழைத்து சென்று மருமகன் பெரூக் விற்றதாக கூறி புகார் அளித்தார்.

இந்தப் பிரச்னையை தீவிரமாக எடுத்துக் கொண்ட போலீசார் பெரூக் மீது வழக்குப் பதிவு செய்தனர்.

மேலும் தலைமறைவான பெரூக்கை கடந்த 9ஆம் தேதி கைது செய்த போலீசார், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, பின்னர் சிறையில் அடைத்தனர்.

அவரிடம் மேற்கொண்ட விசாரணையில், “தனது மனைவியை பணத்திற்காக டெல்லி உள்ள நபரிடம் விற்றுவிட்டேன்” என்று கூறியுள்ளார். அதோடு அந்த நபரை திருமணம் செய்து கொள்ள பெரூக் கட்டாயப்படுத்தியதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்தசூழலில் பாதிக்கப்பட்ட பெண்ணை டெல்லியில் இருந்து மீட்டு வருவதற்காக கலாஹண்டியில் இருந்து ஒரு குழு விரைவில் செல்லும் என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

கிறிஸ்டோபர் ஜெமா

எத்தகையை மழையையும் சமாளிக்க ரெடி” : மு.க.ஸ்டாலின்

மாஸ் காட்டிய பவன் கல்யாண்: கேஸ் போட்ட போலீஸ்!

+1
0
+1
0
+1
0
+1
0
+1
2
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *