பெங்களூருவில் உள்ள ஒரு மேம்பாலத்தில் இருந்து இந்திய ரூபாய் நோட்டுகளை கீழே வீசி சென்ற முன்னாள் கபடி வீரரை கைது செய்த போலீசார் விசாரித்து வருகின்றனர்.
பெங்களூரின் நெருக்கடியான நகரின் மையப்பகுதியில் கே ஆர் மார்க்கெட் மேம்பாலம் உள்ளது. இந்நிலையில் இன்று காலை அங்கு வந்த கருப்பு கோட் அணிந்து கழுத்தில் கடிகாரத்தை தொங்கவிட்டபடி இளைஞர் ஒருவர் வந்தார்.
அவர் மேம்பாலத்தின் நடுபகுதியில் நின்றபடி தன் கொண்டுவந்திருந்த கைப்பையில் இருந்த 10 ரூபாய் நோட்டுகளை எடுத்து கீழே அள்ளி வீசினார்.
இதனை கண்ட நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் அதனை எடுப்பதற்காக குவிந்ததால் அங்கு சிறிதுநேரம் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.
இதன்பின்னர் அங்கிருந்து உடனடியாக அந்த இளைஞர் சென்ற நிலையில் இது குறித்த வீடியோ இணையத்தில் வைரலாகியது.
இதனையடுத்து பணத்தை வீசி எறிந்த அந்த இளைஞரை போலீசார் தேடினர். விசாரணையில் அவர் முன்னாள் கபடி வீரர் அருண் என்பது தெரியவந்தது.
இதனையடுத்து அவரை உடனடியாக கைது செய்த பெங்களூரு போலீசார், அருணிடம் பணம் வீசியது குறித்து விசாரித்து வருகின்றனர்.
விசாரணையில் தான் ஒரு சுய விளம்பரத்திற்காக இவ்வாறு செய்ததாக போலீசாரிடம் அருண் தெரிவித்துள்ளார்.
கிறிஸ்டோபர் ஜெமா
நியூசிலாந்து பந்துவீச்சை நொறுக்கிய ’ரோகித் – கில்’ : அபார சாதனை!
நடிகர் விஜயை பாராட்டிய கனடா மேயர்!