ஒரு பாட்டில் தண்ணீர் 350 ரூபாய்: வாடிக்கையாளர் அதிருப்தி!

Published On:

| By Jegadeesh

ஆந்திர மாநிலம் ஹைதராபாத்தில் உள்ள உணவகம் ஒன்றில் ஒரு பாட்டில் தண்ணீர் 350 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டதாக வாடிக்கையாளர் ஒருவர் அதிருப்தி தெரிவித்துள்ளார்.

சாதாரணமாக ஒரு பாட்டில் தண்ணீருக்கு 20ரூபாய் முதல் 30ரூபாய் வரை நாம் செலவு செய்திருப்போம்.

அதுவே திரையரங்குகள் அல்லது விமான நிலையங்கள் என்றால் அதைவிட சற்று அதிகமாக விற்பனை செய்யப்படும்.

ஆனால், ஆந்திர மாநிலம் ஹைதராபாத்தில் உள்ள பிரபல உணவகம் ஒன்றில் ஒரு பாட்டில் தண்ணீர் 350ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது வாடிக்கையாளர் ஒருவரை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

ஆந்திர மாநிலம் ஹைதராபாத் நகரை சேர்ந்தவர் ரித்திகா. இவர் உடற்பயிற்சி மற்றும் ஊட்டச்சத்து பயிற்சியாளராக உள்ளார்.
இவர் கடந்த ஜூலை 10 ஆம் தேதி நண்பர் ஒருவருடன் அங்குள்ள பிரபலமான நியூ ஃ கபே என்ற உணவகம் ஒன்றிற்கு மதிய உணவு சாப்பிடச் சென்றிருக்கிறார்.

அப்போது அந்த உணவகத்தில் அவர்களுக்கு வழங்கப்பட்ட கண்ணாடி தண்ணீர் பாட்டில் ஒன்றிற்கு ரூபாய் 350 வசூல் செய்யப்பட்டிருக்கிறது.

இதை பார்த்து ஆச்சரியமடைந்த ரித்திகா இது தொடர்பாக அவருடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டு, இந்த கண்ணாடி தண்ணீர் பாட்டிலை நான் என்னுடன் வீட்டிற்கு எடுத்து வந்து விட்டேன்..இதை நான் மட்டும் தான் செய்திருக்கிறேனா இல்லை நீங்களும் இது போன்று செய்திருக்கிறீர்களா ? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், ” இந்த ஆடம்பர உணவகத்தில் மதிய உணவு அருந்துவதற்காக நண்பர் ஒருவரை சந்தித்தேன். சொன்னால் நம்ப மாட்டீர்கள் அங்கே எங்களுக்கு வழங்கப்பட்ட தண்ணீர் பாட்டில் ஒன்றிற்கு ரூபாய் 350 வசூலிக்கப்பட்டது.

அதனால் நான் வீட்டிற்கு வரும் பொழுது அந்த தண்ணீர் பாட்டிலை எடுத்து வந்து விட்டேன். இப்போது அதை நான் மீண்டும் பயன்படுத்த முடியும். இப்படி நான் மட்டும் தான் செய்திருக்கிறேனா இல்லை நீங்களும் செய்திருக்கிறீர்களா?” என்று கேள்வி எழுப்பியுள்ளார். இவரது இந்த பதிவு தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

நெட்டிசன்கள் பலரும் தற்போது அவருடைய பதிவிற்கு கருத்து தெரிவித்து வருகின்றனர்.

அமித் தாஸ் என்ற நபர் , “அதே இடத்தில் இருந்து நானும் இது போன்ற பாட்டில்களை பெற்றுள்ளேன்” என்று கூறியுள்ளார்.

நிரஜ் என்ற நபர், “நியூ கஃபே கடந்த ஆண்டு இந்த பாட்டில்களை அறிமுகப்படுத்தியது. இந்த பாட்டிலை திறப்பதற்கு முன்னால் என்னிடம் கேட்டு விட்டு திறங்கள் என்று அங்குள்ள ஊழியர்களிடம் நான் கண்டிப்புடன் சொல்லி இருக்கிறேன்” என்று கூறியுள்ளார்.

சவ்ரியா ஷிகார் என்பவர், “கடந்த மாதம் என் சகோதரியை இந்த உணவகத்திற்கு அழைத்து சென்றேன். அப்போது இதே போன்று எனக்கும் நடந்தது. அவர்கள் என் தங்கையிடம் இந்த தண்ணீர் பாட்டிலை வீட்டிற்கு எடுத்துச் செல்லுங்கள் என்று வற்புறுத்தினார்கள்” என்று கூறியுள்ளார்.

மு.வா.ஜெகதீஸ் குமார்

‘இமாச்சல் செல்வதை தவிர்க்கவும்’ : கங்கனா

காமெடியாக வாய்ப்பு கேட்ட யோகி பாபு.. சீரியசான தோனி

செந்தில் பாலாஜி விவகாரம் : அட்டர்னி ஜெனரலை சந்தித்த ஆளுநர் ஆர்.என்.ரவி

A bottle of water 350 rupees

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share