துறவியாக மாறிய பெரும் வைர வியாபாரியின் 9 வயது மகள்!

டிரெண்டிங்

குஜராத்தில் பெரும் பணக்கார வைர வியாபாரி ஒருவரின் ஒன்பது வயது மகள், தனது ஆடம்பர வாழ்க்கையைத் துறந்து இன்று (ஜனவரி 18) துறவறத்தினை தழுவியுள்ளார்.

குஜராத் மாநிலம் சூரத்தில் கடந்த 30 ஆண்டுகளாக உள்ள வைர பாலிஷ் மற்றும் ஏற்றுமதி நிறுவனமான சங்வி அண்ட் சன்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் தனேஷ். இவரது மனைவி அமி சங்வி. இத்தம்பதியருக்கு தேவன்ஷி(9) மற்றும் 4 வயதில் மற்றொரு குழந்தை என இரண்டு மகள்கள் உள்ளனர்.

குஜராத்தில் பிரபலமான வைர வியாபாரியான தனேஷ் பெரும் பணக்காரராக வாழ்ந்து வருகிறார். இந்நிலையில் தான் சிறுவயதிலிருந்தே ஆன்மீக வாழ்க்கையில் நாட்டம் கொண்ட அவரது 9 வயதான மூத்த மகள் தேவன்ஷி தற்போது ஜெயின் துறவறத்திற்கு மாறியுள்ளார்.

சூரத்தின் வெசு பகுதியில் ஜெயின் துறவி ஆச்சார்யா விஜய் கிர்த்தியஷ்சூரி மற்றும் நூற்றுக்கணக்கான மக்கள் முன்னிலையில் தேவன்ஷி ‘தீக்‌ஷா’ எடுத்துள்ளார்.

தீக்‌ஷா என்பது மைனர் பெண் தனது துறவு வாழ்வை எடுத்துக்கொள்வதற்கான சபதம் ஆகும். இதன் மூலம் தேவன்ஷி தற்போது துறவற வாழ்விற்குள் நுழைந்துள்ளார்.

இதுகுறித்து தனேஷின் குடும்ப நண்பரான நிரவ் ஷா கூறுகையில், ” தேவன்ஷிக்கு சிறுவயதில் இருந்தே ஆன்மீக வாழ்வில் நாட்டம் அதிகம். துறவறம் தொடங்குவதற்கு முன்பு அவர் துறவிகளுடன் 700 கிமீ தூரம் வரை நடந்துள்ளார். அவளுக்கு ஐந்து மொழிகள் தெரியும்.

இந்நிலையில் தேவன்ஷி தீக்‌ஷா எடுப்பதற்கான விழா கடந்த 14ம் தேதி தொடங்கியது. அவர் தீக்‌ஷா எடுப்பதற்கு ஒரு நாள் முன்பு, நகரில் ஆரவாரத்துடன் மத ஊர்வலம் நடத்தப்பட்டது. அதனை தொடர்ந்து இன்று முறையாக துறவற வாழ்க்கைக்குள்தேவன்ஷி தன்னை இணைத்துள்ளார்” என்று கூறினார்.

9 வயது சிறுமி துறவியாக மாறிய சம்பவம் வைர வியாபாரிகள் மற்றும் ஜெயின் சமூகத்தினர் அதிகம் வசிக்கும் குஜராத் மாநிலத்திலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கிறிஸ்டோபர் ஜெமா

நடிகை அமலாபால் கோவிலுக்குள் செல்ல அனுமதி மறுப்பு!

சரவெடி… அதிரடி… இரட்டை சதம்! : சுப்மன் கில் படைத்த சாதனைகளின் முழுப் பட்டியல்

+1
0
+1
0
+1
3
+1
0
+1
4
+1
0
+1
2

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *