ஒன்பதாம் வகுப்பு வினாத்தாளில் விராட் கோலி குறித்து கேள்வி கேட்கப்பட்டிருப்பதை அவரது ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.
இந்திய அணியின் முன்னாள் கேப்டனும், முன்னணி வீரருமான விராட் கோலிக்கு என்று ஏராளமான ரசிகர்கள் இருக்கின்றனர். ‘கிங் கோலி’, ‘ரன் மெஷின்’ என்று ரசிகர்கள் இவரை செல்லமாக அழைப்பதுண்டு.
அவ்வப்போது தனியார் பள்ளி வினாத்தாள்களில் விராட் கோலியைப் பற்றி கேள்வி கேட்பதுண்டு. அந்த வகையில் தற்போது 9 ஆம் வகுப்பு ஆங்கில வினாத்தாளில் விராட் கோலி புகைப்படத்துடன் ஒரு கேள்வி கேட்கப்பட்டுள்ளது. அதில், ’விராட் கோலி புகைப்படத்தைப் பார்த்து 100-120 வார்த்தைகளில் பதில் எழுத வேண்டும்’ என்ற கேள்வி இடம்பெற்றிருந்தது.
விராட் கோலியைப் பற்றி கேள்வி கேட்கப்பட்ட வினாத்தாளை சிலர் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து ”இது சரியான வினாத்தாளா?” என்று கேள்வி கேட்டு வருகின்றனர்.
ஆனால் அவரது ரசிகர்கள் பலர், அவரது புகைப்படத்தை வைரலாக்கி வருகின்றனர். மேலும், வினாத்தாளில் இடம்பெற்றிருக்கும் அந்த புகைப்படம், 2022 ஆம் ஆண்டு ஆசியக் கோப்பையில் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக விராட் சதம் அடித்தபோது எடுக்கப்பட்டது என்று பதிவிட்டு வருகின்றனர்.
மோனிஷா