8 ஆண்கள் 11 குழந்தைகள்: அமெரிக்க பெண்ணின் விசித்திர ஆசை!

டிரெண்டிங்

அமெரிக்காவை சேர்ந்த பெண்ணிற்கு 8 ஆண்கள் மூலம் 11 குழந்தைகள் பிறந்த நிலையில் தன் மீதான விமர்சனங்களுக்கு வித்தியாசமான விளக்கத்தை கொடுத்துள்ளார்.

அமெரிக்காவில் உள்ள டென்னசிவை சேர்ந்தவர் பிஹாய். இவருக்கு மொத்தம் 11 குழந்தைகள் உள்ளனர்.

இந்த குழந்தைகளுக்கு மொத்தம் 8 தந்தைகள் என்பதுதான் விசித்திரம். இதையடுத்து பலரும் பிஹாயைக் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

இதற்குப் பதிலடி தரும் வகையில் வினோதமான விளக்கத்தை அவர் கொடுத்துள்ளார். பிஹாய் கூறுகையில், ”8 ஆண்கள் மூலம் 11 குழந்தைகள் எனக்கு பிறந்ததற்காக நான் வெட்கப்படவில்லை, இது எனக்கு நன்மைதான்.

8 Men 11 Children American Woman Strange Desire

எப்படியென்று தானே கேட்கிறீர்கள்? அதாவது உங்களிடம் ஒன்று இருந்தால், அந்த ஒன்றையும் எடுத்துக் கொண்டால், உங்களிடம் பூஜ்ஜியம் மட்டுமே இருக்கும். ஆனால் உங்களிடம் எட்டு இருந்தால் மற்றும் அதிலிருந்து மூன்றை எடுத்தால், உங்களிடம் இன்னும் ஐந்து உள்ளது.

8 Men 11 Children American Woman Strange Desire

இன்னும் புரியவில்லையா? அதாவது என் குழந்தைகளுக்கு ஒரு தந்தை மட்டும் இருந்தால் அவர் என்னைப் பிரிந்தாலோ அல்லது இறந்துவிட்டாலோ என் குழந்தைகள் தந்தையற்றவர்களாகி விடுவார்கள்.

8 Men 11 Children American Woman Strange Desire

ஆனால் இப்போது 8 பேரில் மூவர் இல்லையென்றாலும், ஐந்து பேர் இருப்பார்கள்” என கூறியுள்ளார்.

அவரின் இந்த விளக்கத்தையும் பலர் கடுமையாக விமர்சித்துள்ளனர். இதனிடையில் மேலும் பல குழந்தைகள் பெற்றுக்கொள்ள வேண்டும் என்பது பிஹாயின் விருப்பமாம்..!

மு.வா.ஜெகதீஸ் குமார்

விபத்தில் சிக்கிய முன்னாள் அமைச்சர்களின் கார்கள்!

“தமிழகத்தில் மத்திய அமைச்சர்கள் ஆய்வு : டி.ஆர்.பாலு பதில்!

+1
0
+1
1
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published.